தோனிக்கு ஆபரேஷன் முடிந்துவிட்டதாம்.. சிஎஸ்கே தரப்பு தெரிவித்த தகவல்! – ரிப்போர்ட்!

0
1163

தோனிக்கு அறுவைசிகிச்சை முடிந்துவிட்டதாம். சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மறக்க முடியாத சீசனாக அமைந்திருக்கிறது. ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்து முதல் குவாலிபயர் போட்டியை விளையாடும் அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

அதில் பலமிக்க குஜராத் அணியை வீழ்த்தி பைனலுக்கும் முன்னேறியது. பைனலில் மீண்டும் குஜராத் எதிர்கொண்ட வேண்டிய நிலை சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டது.

அதில் முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்டது. அடுத்த நாளில் மழைப்பொழிவு காரணமாக தாமதம் ஏற்பட்டிருந்தாலும், இறுதியாக 15 ஓவர்களாக போட்டி நடைபெற்று சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சேஸ் செய்தது. ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.

சீசன் முழுவதும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முட்டிப்பகுதியில் காயத்தை வைத்துக்கொண்டு சமாளித்து கீப்பிங் பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பிலும் அபாரமாக செயல்பட்டு வந்தார். இந்த காயத்தை வைத்துக்கொண்டு அடுத்த சீசன் மீண்டும் வர முடியுமா? என்கிற பல்வேறு கேள்விகள் நிலவில் வந்தன.

- Advertisement -

இந்நிலையில் தோனிக்கு அறுவைசிகிச்சை நடக்குமா? இல்லையா? என்பது குறித்து சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காசி விசுவநாதன் அவர்கள் பதில் கூறினார். அதில், “தோனிக்கு காலில் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனையில் அறுவைசிகிச்சை பரிந்துரை செய்யப்படுமா? என் இன்னும் தெரியவில்லை. ஒருவேளை பரிந்துரை செய்யப்பட்டால், செய்துகொள்ள வேண்டுமா? இல்லையா? என்பதை தோனி முடிவு செய்வார்.” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வெளிவந்த தகல்வல்களின்படி மும்பையில் உள்ள மருத்துவமனையில் கால் பகுதிக்கு பரிசோதனை செய்த தோனிக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. தனது காலில் அறுவைசிகிச்சை செய்வதாக ஒப்புக்கொண்டு, நேற்றைய தினம் செய்து கொண்டுள்ளார்.

- Advertisement -

அதன்பிறகு சிஎஸ்கே நிர்வாகிகள் சிலர் அவரிடம் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். அப்போது தோனி சகஜமாக பேசினார் என்று கூறப்பட்டது.

காசி விஸ்வநாதன் அவர்கள் மீண்டும் கொடுத்த தகவலில், தோனி குறித்து வெளிவந்த தகவல்கள் அனைத்தும் உண்மை தான் உறுதியாகியுள்ளது. காயம் சரியாக குறைந்தபட்சம் 3-4 மாதங்கள் எடுக்கும் எனவும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு தோணி பயிற்சியில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என தெரியவில்லை. அத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதும் தெரியவில்லை. தோனி முடிவெடுப்பார் என காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.