தோனிக்கு ஆபரேஷன் எப்போது? அடுத்த சீசன் விளையாட முடியுமா? – பேட்டியில் பல்வேறு உண்மைகளை பகிர்ந்த காசி விஸ்வநாதன்!

0
860

தோனி அடுத்த சீசன் ஆடுவாரா? அவருக்கு காலில் ஆபரேஷன் எப்போது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பேட்டியில் பதில் கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விசுவநாதன்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பல்வேறு திருப்புமுனைகளைக் கொண்டிருந்தது. கடைசியில் பைனல் போட்டியில் நடைபெறுவதிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவி, இறுதியாக நடைபெற்று அதில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது. இந்த வெற்றியை தோனிக்கு சமர்ப்பிப்பதாக போட்டியை பினிஷ் செய்து கொடுத்த ஜடேஜா கூறினார்.

- Advertisement -

இந்த தொடர் முழுவதும் தோனி தனது இடது கால் முப்ட்டியில் காயத்தை வைத்துக்கொண்டு விளையாடினார். பேட்டிங்கில் எட்டாவது வீரராக களமிறங்கி கடைசி இரண்டு ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்டு வந்தார். அதே பிரச்சினையை வைத்துக் கொண்டு கீப்பிங்கில் கலக்கினார்.

குறிப்பாக கேப்டன் பொறுப்பில் இவர் செய்த பங்களிப்பு அணியை கோப்பையை வெல்லும் வரை எடுத்துச் சென்றுள்ளது. இன்னிலையில் அடுத்த சீசன் விளையாடுவீரா? என்பது பற்றி அவரிடம் கேட்டதற்கு, “அதற்கு இன்னும் ஆறு ஏழு மாதங்கள் இருக்கின்றன. பொறுமையாக முடிவெடுக்கிறேன்.” என்று தோனி கூறினார்.

காலில் இருக்கும் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை உண்டா? மற்றும் அவர் அடுத்த சீசன் விளையாடுவாரா? என்று பல்வேறு கேள்விகளை சிஎஸ்கே அணையின் தலைமைச் செயல் அதிகாரி காசி விசுவநாதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறியதாவது:

- Advertisement -

(தோனியின் காலில் அறுவைசிகிச்சை நடக்குமா?) தோனி தனது காலில் என்ன பிரச்சனை இருக்கிறது? அதற்கு என்ன செய்யலாம்? என்பதை மருத்துவர்களிடம் ஆலோசித்து வருகிறார். பரிசோதனை நடந்து முழுமையான அறிக்கை வெளிவந்த பிறகு ஆபரேஷன் குறித்த முடிவுகளை தோனி எடுப்பார். நாங்களும் அதில் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.

“(மினி ஏலம் நடப்பதற்குள் தோனி அணியிலிருந்து விலகி 15 கோடி கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதா?) இது தோனியின் கையில் தான் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் சார்பில் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் அதுபோன்ற எண்ணத்தில் இல்லை. அதை ஊக்குவிப்பதும் இல்லை. அவரின் முக்கியத்துவம் தெரியும்.”

“சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் அகமதாபாத் மைதானத்தில் இருந்து நேரடியாக அவரவர்கள் இடத்திற்கு சென்று விட்டார்கள். சிலருக்கு சர்வதேச போட்டிகள் இருக்கின்றது. சிலருக்கு உள்ளூர் போட்டிகள் இருக்கின்றது. ஆகையால் சென்னை மைதானத்திற்கு வராமல் நேரடியாக சென்றுவிட்டனர்