சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மீதான சுமையை எவ்வாறு குறைக்கும் என்பது குறித்தும், ருதுராஜின் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் முன்னாள் சிஎஸ்கே வீரர் விரிவாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் பேசும்போது “எம்.எஸ். தோனி அணியில் இல்லாதது, அணியை வழிநடத்தும் நபரின் சுமையை உண்மையில் கொஞ்சம் குறைக்கும் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால் எம்.எஸ். தோனி அருகில் இருந்தால், அங்கீகாரத்திற்காகவும் முடிவு எடுப்பதற்கும் நீங்கள் எப்போதும் எம்.எஸ். தோனியையே பார்த்துக்கொண்டிருப்பீர்கள், மேலும் அவர் உங்களை எடைபோடுகிறார் என்ற எண்ணம் எப்போதும் உங்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய உயரத்தில் இருக்கும் ஒருவர் அருகில் இருப்பது எப்போதும் சவால்களைக் கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “பேட்டரான ருதுராஜ் கெய்க்வாட் தனது சொந்த ஆட்டத்திற்கு நியாயம் செய்யவில்லை, ஏனென்றால் அவர் விஷயங்களை அணுகும் விதத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்து வருகிறார். ஆம், நீங்கள் ஒரு கிளாசிக்கல் பேட்ஸ்மேன் தான், ஆனால் உங்கள் ஆட்டத்தில் ஒரு விரிவாக்கத்தைக் கொண்டு வருவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது, ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதிலும் தகவமைத்துக் கொள்வதிலும் அவர் தயக்கம் காட்டுவதாக நான் உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.
அவர் மேலும் பேசுகையில் “அவரிடம் திறமை இருக்கிறது, அவர் சிஎஸ்கே அணிக்காக ஒரு மேட்ச்-வின்னராக இருந்துள்ளார், கடந்த காலங்களில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாகச் செயல்பட்டுள்ளார், அவர் இப்போது முன்வந்து எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.






