மதீஷ பதிரானா இதை மட்டும் கடைப்பிடித்தால் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் – எம் எஸ் தோனி புகழாரம்

0
1216
MS Dhoni about Matheesha pathirana

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று இரவு வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் 49 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் அற்புதமாக பந்துவீசிய முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய குஜராத்தி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டுள்ளது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சஹா 67* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னாள் சென்னை வீரரை பாராட்டிய மகேந்திர சிங் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பு இன்றி தவித்த சாய் கிஷோர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் விளையாடி வருகிறார். தன்னுடைய முதல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் மிக அற்புதமாக பந்துவீசி மொயின் அலியின் விக்கெட்டை கைப்பற்றினார்.போட்டி முடிந்தவுடன் “சாய் கிஷோர் சிறப்பாக பந்துவீசினார்”என்று மகேந்திர சிங் தோனி அவரை மனதார பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

மதீஷ பதிரானா சிறப்பான டெத் பவுலர்

19 வயதான இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பதிரானா நேற்று சென்னை அணிக்கு முதன் முதலாக களமிறங்கி விளையாடினார். முதல் ஐபிஎல் போட்டியிலேயே மிக சிறப்பாக பந்துவீசி ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அவரைப் பற்றியும் குறிப்பிட்டு பேசிய மகேந்திர சிங் தோனி, “என்னை பொறுத்தவரையில் இவர் சிறந்த டெத் பவுலர். லசித் மாலிங்கவின் சாயல் இவரிடம் உள்ளது. இவருடைய பந்துவீச்சு ஸ்டைலில், பிழையின் விளிம்பு மிகப் பெரியது. இவருடைய பந்துவீச்சு ஸ்டைலில் போதுமான பவுன்ஸ் இவருக்கு கிடைக்காமல் போகின்றது. அதேசமயம் இவர் ஸ்லோவர் பந்துகளை மிக அற்புதமாக வீசுகிறார். இதேபோன்று தொடர்ச்சியாக அவர் சிறப்பாக பந்துவீசினால், அவருடைய பந்துகளை எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் அவ்வளவு சுலபத்தில் அடிக்க முடியாது”, என்று மகேந்திர சிங் தோனி மதீஷ பதிரானாவை வெகுவாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.