” உங்களை 4 சிக்ஸர்கள் அடித்தாலும் பரவாயில்லை இது உங்களை காப்பாற்றும் ” – பவுலர்களுக்கு சென்னை கேப்டன் தோனி வழங்கும் அறிவுரை

0
567
MS Dhoni CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான நேற்று நடந்து முடிந்த ஆட்டத்தில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற எதிர்பார்த்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் 57 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிஸ்சர் உட்பட 209 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 33 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 64* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அந்த மேஜிக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு – எம்எஸ் தோனி

போட்டி நடந்து முடிந்த பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.”நான் எப்பொழுதும் எனது பந்துவீச்சாளர் இடம் ஒரு விஷயத்தை சொல்லுவேன். ஒரு ஓவரில் ஆரம்பத்தில் 4 பந்துகளில் 4 சிக்சர்கள் போனால் கூட பரவாயில்லை. அடுத்த இரண்டு பந்துகளையும் நீங்கள் சாமர்த்தியமாக வீச வேண்டும்.
அந்த இரண்டு பந்துகள் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும்.

பொதுவாக ஒரு ஓவரில் முதல் 4 பந்துகளில் சிக்ஸராக அமைந்து விட்டால் பந்துவீச்சாளர் மனதளவில் சோர்ந்து விடுவார். ஆனால் அப்படி சோர்வடையாமல் மீதமிருக்கும் இரண்டு பந்துகளை சாமர்த்தியமாக வீசியாக வேண்டும். மீதமுள்ள அந்தக் 2 பந்துகளில் எதிரணி வீரரை சிக்ஸர் அடிக்க விடாமல், குறைந்தபட்சம் பவுண்டரியாவது அடிக்க விடலாம்.

- Advertisement -

இப்படிச் செய்வதன் மூலம் நாம் கட்டுப்படுத்தும் ஒரு சில ரன்களைக் கொண்டு இறுதி நேரத்தில் வெற்றி பெறலாம். இந்த மேஜிக் தியரியில் மற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டோ இல்லையோ எனக்கு நம்பிக்கை உண்டு.
இவ்வாறு எம் எஸ் தோனி தனது மேஜிக் தியரி குறித்து விளக்கினார்.

9 போட்டிகளில் 3’இல் வெற்றி கண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீதமிருக்கும் ஐந்து போட்டிகளிலும் கட்டாயமாக வெற்றி வெற்றி பெற்று(நெட் ரன்ரேட் அதிகமாக இருக்கும் பட்சத்தில்) ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. சென்னை அணி இதை சாத்தியப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.