2025 ஆம் ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் முகமான மகேந்திர சிங் தோனி யாரும் எதிர்பார்க்காத ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்யலாம் என இந்திய லெஜெண்ட் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியின் பங்களிப்பு மற்றும் அவர் இல்லாத சிஎஸ்கே அணி எப்படி செயல்படும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா மற்றும் தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் ஏபி.டிவில்லியர்ஸ் ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
சிஎஸ்கே அணியின் புதிய எதிர்காலம்
சிஎஸ்கே அணியின் ஒற்றை முகமாக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றது, அதிக முறை இறுதிப் போட்டிக்கு சென்றது, அதிக முறை ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியது என சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் தனித்துவமான தகர்க்க முடியாத சாதனைகளை செய்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு புதிய கேப்டனாக ருதுராஜை தோனி கொண்டு வந்தார். இதற்காக இந்த ஆண்டு அவர் மேலும் ஒரு காரியத்தை செய்யலாம் என அனில் கும்ப்ளே நம்புகிறார்.
இது குறித்து அனில் கும்ப்ளே கூறும்பொழுது “ருதுராஜ் கேப்டனாக சிஎஸ்கே அணியை வழிநடத்துகின்ற காரணத்தினால் தோனி இந்த ஐபிஎல் சீசனில் களமிறங்காமல் கூட இருக்கலாம். மேலும் இம்பேக்ட் பிளேயர் விதிக்கு மற்றும் தக்கவைப்பு விதிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் விதியால் அவர் குழுவில் ஒரு நபராக மட்டும் தொடர முடியும்” என்று கூறியிருக்கிறார்.
ஆகாஷ் சோப்ரா – ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு புதிய சகாபத்திற்கான வேலைகள் தொடங்கி விட்டதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் தோனி அந்த அணியில் இடம்பெறாத ஒரு காலகட்டம் வந்து விட்டதாக நான் உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : வெறும் 13 இன்னிங்ஸ் 5 சதங்கள்.. ரச்சின் ரவீந்தரா தனித்துவ சாதனை.. செமி பைனலில் அபார பேட்டிங்
தோனி, சிஎஸ்கே பற்றி பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “கிரிக்கெட் விளையாட்டை பார்க்கவும், அதிலிருந்து உத்வேகத்தைப் பெறவும், மில்லியன் கணக்கான ரசிகர்களை மகிழ்வித்ததற்காகவும் தோனிக்கு நாம் கிரெடிட் கொடுக்க வேண்டும். அவரைப் போன்றவர்கள்தான் இந்த விளையாட்டை நீண்ட காலமாக சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இன்னும் இது சில ஆண்டுகளுக்கு தொடரும்” என்று நினைக்கிறேன்.






