வெறும் 13 இன்னிங்ஸ் 5 சதங்கள்.. ரச்சின் ரவீந்தரா தனித்துவ சாதனை.. செமி பைனலில் அபார பேட்டிங்

0
81
Rachin

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது செமி பைனல் போட்டி பாகிஸ்தான் லாகூர் கடாபி மைதானத்தில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா தனித்துவ சாதனை படைத்திருக்கிறார்.

இந்த தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற முதல் செமி பைனல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்று நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் இரண்டாவது செமி பைனல் போட்டி நடந்து கொண்டு வருகிறது.

- Advertisement -

நியூசிலாந்து அதிரடி தொடக்கம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. நியூசிலாந்து அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 7.5 ஓவரில் 48 ரன்கள் வந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வில் யங் 23 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா உடன் முன்னாள் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி ரன்கள் சேர்க்க ஆரம்பித்தது. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 100 ரன் பார்ட்னர்ஷிப் தாண்ட இருவருமே அறை சதம் கடந்தார்கள்.

- Advertisement -

ரச்சின் ரவீந்தரா சாதனை

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரநாத் 93 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் தனது ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை அடித்தார். மேலும் அவருக்கு இது ஐந்தாவது ஐசிசி போட்டிகள் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மூன்று சதங்களும், தற்போது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இரண்டு சதங்களும் என மொத்தம் 13 ஐசிசி இன்னிங்ஸ்களில் ஐந்து சதங்கள் அடித்திருக்கிறார்.

மேலும் நியூசிலாந்து அணிக்காக ஐசிசி தொடர்களில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் கேன் வில்லியம்சன் மற்றும் நாதன் ஆஸ்ட்லே இருவரும் தலா மூன்று சதங்கள் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உண்மையை மறைத்த கம்பீர், ரோகித்.. போட்டு உடைத்த முகமது சமி.. சாம்பியன்ஸ் டிராபியில் நடந்தது என்ன?

ஐசிசி தொடர்களில் அதிக சதம் அடித்த வீரர்கள்:

8- ரோஹித் சர்மா (42)
7 – சவுரவ் கங்குலி (32)
7- சச்சின் டெண்டுல்கர் (58)
6- ஷிகர் தவான் (20)
6- டேவிட் வார்னர் (33)
6 – விராட் கோலி (53)
6-கே சங்கக்கார (56)
6 – ரிக்கி பாண்டிங் (60)
5 – ரச்சின் ரவீந்திரா (13)*
5 – சயீத் அன்வர் (25)
5- கிப்ஸ் (33)
5- ஜோ ரூட் (37)
5- தில்ஷன் (38)
5- கிறிஸ் கெய்ல் (51)

- Advertisement -