தோனிக்கா இந்த நிலைமை..அன்று புயல் வேகத்தில் ஓடியவர்..இன்று பார்க்கவே கஷ்டமா இருக்கு.. ரசிகர்களுக்காக கஷ்டப்படும் தோனி- வீடியோ

0
1025

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். தோனி ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவதிலும் கேப்டன் பணியை சிறப்பாக செய்வதிலும் வல்லவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும் .

அதேபோல் தோனி ஓடுவதிலும் சிறந்து விளங்குவார். பேட்டிங் செய்யும்போது தோனி ரன்கள் ஓடி எடுத்து விடுவார். இன்னும் சொல்லப்போனால் ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் தோனி அழகாக இரண்டு ரன்கள் ஓடியே எடுத்து விடுவார்.

- Advertisement -

இது தோனியின் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தோனிக்கு தற்போது 41 வயது ஆகிறது. இதனால் இந்த வயதில் அவருக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் வந்துள்ளது.குறிப்பாக தோனி மூட்டுவலி பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இது தொடர்பாக பல்வேறு சிகிச்சைகளை தோனி எடுத்து வந்தார்.

மூட்டுவலி காரணமாகத்தான் பேட்டிங் செய்ய தோனி வருவதில்லை. கடைசி கட்டத்தில் களம் இறங்கும் தோனி சிக்சர் பவுண்டரிகளை அடித்து வருகிறார். தோனிக்கு காயம் ஏற்பட்டிருப்பதை சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கனவே உறுதி செய்து விட்டது. ஆனால் எந்த போட்டியிலும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சென்னை ரசிகர்களுக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு இர்பான் பதான் தோனியை சந்தித்தபோது அவர் காலில் ஐஸ் கட்டி வைத்திருந்தார்.இதனை பார்க்கும் போது ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர். இதனிடையே, தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதில், பயிற்சி ஆட்டத்தில் தோனி ரன் ஓட மிகவும் சிரமப்படுகிறார். நொண்டி நொண்டி ரன் ஓடுகிறார். இதை பார்க்கும் போது ரசிகர்கள் , ரொம்ப கஷ்டப்படாதீங்க உங்களை இந்த மாதிரி  பார்க்கவே முடியல என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இதே தோனி இந்திய அணிக்காக ரன் ஓடும்போது மணிக்கு 31 கிலோமீட்டர் வேகத்தில் ஓடினார்.

ஆனால் தற்போது அவர் நொண்டி நொண்டி ஓடுவது ரசிகர்கள் மனதை பாதித்துள்ளது. இந்த இடத்தில் இந்த இரண்டு வீடியோவையும் போட்டு பாருங்க சிஎஸ்கே அணிக்காக தோனி எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று பதிவிட்டு வருகின்றனர். அடுத்த சீசனில் தோனிக்கு 42 வயது ஆகிவிடும் என்பதால் இதுதான் அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும்.