ஐபிஎல் 2025.. சிஎஸ்கே வீரர் விஜய் சங்கர் தண்ணீர் பாட்டிகள் கொடுக்க தான் பயன்படுவார்.. ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்

0
36

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வந்தது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. தற்போது 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. இதனால் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் போன்ற வீரர்கள் எல்லாம் இருக்கிறார்கள் .விஜய் சங்கர் டி20 போட்டிக்கு ஏற்ற பேட்ஸ்மேன் கிடையாது என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

- Advertisement -

விஜய் சங்கர் மீது விமர்சனம்:

இந்த நிலையில் விஜய் சங்கருக்கு பிளேயிங் லெவனில் ஏன் வாய்ப்பு தருகிறீர்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் விஜய் சங்கரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரசிகர் ஒருவர் சிஎஸ்கே அணிக்கு விஜய் சங்கர் தேவையா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீகாந்த், ஆம் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொடுக்க விஜய் சங்கர் தேவை என்று கிண்டலாக பதிலளித்திருக்கிறார். விஜய் சங்கரை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. தற்போது 5 இன்னிங்ஸ்களில் விஜய் சங்கர் மொத்தமாக 118 ரன்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -

ராகுல் திரிப்பாதி வேண்டாம்:

இதில் அவருடைய சராசரி 39 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 129 என்ற அளவில் இருக்கின்றது. இந்த நிலையில் தனது youtube சேனலில் சிஎஸ்கே அணி பேட்டிங் குறித்து பேசிய ஸ்ரீகாந்த், சிஎஸ்கே அணி ராகுல் திருப்பாதியை நீக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். மேலும் ராகுல் திருப்பாதிக்கு பதில் பெஞ்சில் தேய்த்துக் கொண்டிருக்கும் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் இருந்து சொல்றேன்.. ஐபிஎல்தான் பெஸ்ட்.. பிஎஸ்எல் பின்னாடிதான் – சாம் பில்லிங்ஸ் பேச்சு

ராகுல் திருப்பாதியையும் சிஎஸ்கே அணி மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. ஆனால் ஐந்து இன்னிங்சில் ராகுல் திருப்பாதி வெறும் 55 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 11 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 96 என்ற அளவில் இருக்கிறது. இந்த சூழலில் சிஎஸ்கே அணி வரும் இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மும்பை அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -