இன்றைய ஐபிஎல் போட்டியில் மகத்தான சாதனையை படைக்கப் போகும் தோனி,ராகுல்..!

0
74

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடுகிறது. தல தோனியை இத்தனை நாட்கள் கழித்து பார்க்க உள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

லக்னோ அணியுடன் இதுவரை சிஎஸ்கே ஒரு முறை மோதி இருக்கிறது. அதிலும் தோல்வியை தழுவி உள்ளது. மேலும் நடப்பு சீசனில் முதல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி தழுவியதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்த போட்டியில் தோனி ஒரு மகத்தான சாதனையை படைக்க காத்திருக்கிறார். அதில் தோனி இன்னும் எட்டு ரன்களை அடித்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை அடித்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது தோனி 235 போட்டிகளில் 4992 ரன்கள் அடித்திருக்கிறார் .

இதற்கு முன்பு விராட் கோலி, தவான் டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா,டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டி இருக்கிறார்கள்.இதேபோன்று லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் மகத்தான சாதனையை எதிர்நோக்கி உள்ளார்.டி20 கிரிக்கெட்டில் அவர் இன்னும் 11 சிக்சரை அடித்தால் 300 சிக்ஸர்களை எட்டிய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

- Advertisement -

இதேபோன்று கே எல் ராகுல் 65 ரன்கள் அடித்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக 500 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதே போன்று கே எல் ராகுல் 103 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 4000 ரன்கள் தொட்ட வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது டி20 போட்டியில் ராகுல் 94 கேட்ச்களை பிடித்துள்ளார்.

இதனால் மேலும் 6 கேட்ச் பிடித்தால் 100 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற மைல்கல்லையும் எட்டுவார். லக்னோ அணி முதல் ஆட்டத்தில் கேல் ராகுல் 12 பந்துகளை எதிர் கொண்டு 8 ரன்களை மட்டுமே அடித்தார். எனினும் கையில் மெயர்ஸ் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி லக்னோ அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர்.

இதனால் சிஎஸ்கேக்கு இன்றைய ஆட்டம் மிகவும் கடுமையானதாக இருக்கும். குறிப்பாக முதல் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் சி எஸ் கே வீரர் மார்க் வுட்டை எதிர் கொள்வது சவாலான காரியமாக சிஎஸ்கேவுக்கு இருக்கும். டாஸ் வென்று முதலில் பந்து வீசும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.