இன்று டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனலில் மும்பை வான்கடை மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த மைதானத்தில் உள்ள சிரமங்கள் குறித்து இந்திய அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற முதல் செமி பைனலில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய செய்து இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் பிரச்சனை
இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 உலகக்கோப்பை தொடர் ஒன்றில் செமி பைனலில் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இந்த மைதானத்தில் இன்னொரு டி20 உலகக்கோப்பை செமி பைனலில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இந்த மைதானம் குறித்து மோர்னே மோர்கல் பேசும் பொழுது “இந்த மைதானத்தில் பனிப்பொழிவு ஒரு பெரிய கவலையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயம். அதே சமயத்தில் இந்த மைதானத்தில் ஆடுகளத்தில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் கிடைக்கும்”
இப்படித்தான் ஆட வேண்டும்
“வீரர்கள் பவுன்சை நம்பி நேராக அடிக்கலாம். ஆனால் இது ஒரு பவுலரை வெற்றி பெறவும் வைக்கலாம். ஆனால் இந்த தவறு செய்வதற்கு ஒரு பவுலருக்கு மார்ஜின் மிகவும் குறைவு. ஏனென்றால் பந்து காற்றில் மிகவும் வேகமாக பயணம் செய்யும் அதே சமயத்தில் மைதானத்தின் அளவும் சிறியது”
இதையும் படிங்க : நேத்து நாங்க சோக் ஆகல.. நியூசிலாந்து நிமிரவே முடியாம அடிச்சாங்க.. இது முழுமையான தோல்வி – சுக்ரி கான்ராட் பேச்சு
“நீங்கள் இங்கு ஒவ்வொரு பந்துக்கும் கவனத்துடன் போட்டியிட்டு அந்த தருணத்தில் இருந்து விளையாட வேண்டும். ஏனென்றால் இந்த மைதானத்தில் உங்களுடைய பலம் கூட பலவீனமாக மாறும். மேலும் எந்த நேரத்திலும் தாக்கி விளையாடுவதற்கு தயாராக இருப்பது மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.






