இந்திய கிரிக்கெட்

நிதீஷ் குமார் மைண்ட் செட் அற்புதமானது.. அடுத்த பாண்டியாவா மாத்த இத பண்ணிட்டு இருக்கேன் – மோர்னே மோர்கல் விளக்கம்

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியின் திறமை மற்றும் அணுகுமுறையைப் பற்றி இந்திய அணியின் பவுலிங் கோச் மோர்னே மோர்கல் பாராட்டி பேசியுள்ளார்.

- Advertisement -

​ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

​மேலும் 2027 உலகக்கோப்பை போட்டிக்குத் தயாராகும் விதமாக, இந்திய பவுலர்கள் இத்தொடரை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், இக்கட்டான சூழல்களில் சிறப்பாகப் பந்துவீசி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

​நிதிஷ் குமார் ரெட்டி குறித்து மோர்னே மோர்கல் பேசும்போது “நிதிஷ் கடந்த டி20 போட்டிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. எளிமையான விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே அவருக்கு நாங்கள் தரும் மெசேஜ். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அவர் மிகச் சிறந்த திறமைசாலி. எப்பொழுதும் வாய்ப்புகளை உருவாக்க நினைக்கும் அவரது மைண்ட்செட் அற்புதமானது. அவர் கற்றுக்கொண்டு உயர நாங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் ஆல்ரவுண்டர் இடத்திற்குப் போட்டியிடுவது மிகவும் நல்லது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து உலகக்கோப்பை தயாரிப்பு குறித்து மோர்னே மோர்கல் பேசும்போது “உலகக்கோப்பை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென திட்டமிட முடியாது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்தே இது தொடங்குகிறது. தவறான பந்துகள் போடுவதைக் குறைத்து, பிரஷர் சூழ்நிலைகளை எதிர்கொள்ள பவுலர்கள் பந்தை கேட்டு வாங்கி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கடினமான சூழலில் பந்துவீச நினைப்பதே நமது முக்கிய கோல் ஆகும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts