ஷிவம் துபேவுக்கு பதில் ஹர்ஷித் ராணா.. முடிவெடுத்தது இவங்கதான்.. நடந்தது என்ன? – மோர்னே மோர்கல் பேட்டி

0
731
Morkel

நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஹர்ஷித் ராணா மாற்று வீரராக உள்ளே வந்து பந்து வீசியது, யார் எடுத்த முடிவு? என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியிருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷிவம் துபேவுக்கு தலையில் அடிபட்ட காரணத்தினால் ஹர்ஷித் ராணா உள்ளே வந்த விவகாரம் தற்பொழுது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.

- Advertisement -

விதி என்ன சொல்கிறது?

ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு அவரால் விளையாட முடியாமல் போகும்பொழுது அவருக்கு மாற்றுவீரரை களம் இறக்கிக் கொள்ள கிரிக்கெட் விதி அனுமதிக்கிறது. ஆனால் அந்த வீரர் ஒரு குறிப்பிட்ட வீரர் பேட்ஸ்மேன் என்றால் களம் இறக்கப்படும் வீரராக இருப்பவரும் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது. யார் காயப்படுகிறார்களோ அவர்களுக்கு சரியான வீரர் களமிறங்க வேண்டும்.

மேலும் இந்த முடிவை போட்டி நடுவர் எடுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட அணி நிர்வாகம் வீரர்கள் பெயரைக் கொடுக்கும் அதிலிருந்து போட்டி நடுவர் ஒரு குறிப்பிட்ட வீரரை தேர்ந்தெடுப்பார். நேற்று ஷிவம் துபே இடத்தில் விளையாடி இருக்க வேண்டியவர் ரமன்தீப் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மோர்னே மோர்கல் விளக்கம்

இதுகுறித்து மோர்னே மோர்கல் விளக்கம் அளிக்கும்பொழுது “ஷிவம் துபே சிறிது தலையில் வலியுடன் போட்டியின் இரண்டாம் பகுதியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பொருத்தமான ஒரு மாற்று வீரர் பெயரை நாங்கள் போட்டி நடுவரிடம் எடுத்துச் சென்றோம். அங்கிருந்து முடிவெடுப்பது போட்டி நடுவர்தான். அப்பொழுது ஹர்ஷித் ரானா இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் அவரை சீக்கிரம் பந்து வீச தயார்படுத்த வேண்டி இருந்தது”

இதையும் படிங்க: 142 ரன் 68 பந்து.. ஹென்றிக்ஸ் ப்ரெவிஸ் கூட்டணி அபாரம்.. வில் ஜாக்ஸ் போராட்டம் வீண்.. 27 ரன்னில் எம்ஐ வெற்றி.. எஸ்ஏ டி20

“இது எனக்கு மேலே உள்ள சக்திகளிடம் இருக்கக்கூடிய விஷயம். முடிவெடுக்கும் இடத்தில் நான் கிடையாது. போட்டி நடுவர் தான் இது சம்பந்தமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை பெற்று இருக்கிறார். நாங்கள் மாற்று வீரர் பெயரை மட்டுமே கொண்டு செல்ல முடியும். யாரை அனுமதிப்பது? என்பது போட்டி நடுவர்தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -