142 ரன் 68 பந்து.. ஹென்றிக்ஸ் ப்ரெவிஸ் கூட்டணி அபாரம்.. வில் ஜாக்ஸ் போராட்டம் வீண்.. 27 ரன்னில் எம்ஐ வெற்றி.. எஸ்ஏ டி20

0
161

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 27 ஆவது போட்டியில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடின.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் எம்ஐ அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்

செஞ்சுரியனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் தொடங்கிய எம்ஐ அணிக்கு ரிக்கல்டன் மற்றும் வாண்டர்டசன் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. 22 ரன்கள் எடுத்த நிலையில் ரிக்கல்டன் ரோஜர்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் வாண்டர்டசன் 30 ரன்னில் வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய ரிசா ஹென்றிக்ஸ் மற்றும் ப்ரவிஷ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்தக் கூட்டணி 68 பந்துகளுக்கு 142 ரன்கள் குவித்தது. 44 பந்துகளை எதிர்கொண்ட ஹென்றிக்ஸ் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 77 ரன்கள் குவித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய பிரவீஸ் 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 72 ரன்கள் குவித்தார். இதனால் எம்ஐ
அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது.

- Advertisement -

எம்ஐ அணி சிறப்பான வெற்றி

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்டோல்க் 13 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்து வெளியேறினார். மேலும் மூன்றாவது வரிசை வீரரான வில் ஸ்மித் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு அதிகபட்சமாக கீகன் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்து களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்னில் வெளியேறினார்கள்.

இதையும் படிங்க:முக்கியமான நேரத்தில்.. நான் செஞ்ச தப்புதான் தோல்விக்கு காரணம்.. இன்னும் இதை சரி செய்யனும் – பட்லர் கருத்து

இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் மட்டுமே குவித்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எம்ஐ அணி தரப்பில் கார்பின் போஸ் மற்றும் ரசீத் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதன் மூலம் 9 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள எம்ஐ அணி 6வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ப்ளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே இந்த அணி தகுதி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -