விராட் கிடையாது.. என் கண்களைத் திறந்தது இந்த ஆர்சிபி பையன்தான்.. வேற லெவல் கேரக்டர் – தினேஷ் கார்த்திக் பாராட்டு

0
396
DK

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆர்சிபி அணியின் மென்டர் மற்றும் தமிழ்நாடு, இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய கண்களை ஒரு இளம் ஆர்சிபி வீரம் திறந்து உள்ளதாக கூறியிருக்கிறார்.

தற்போது ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து முதல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. முதல் முறையாக மென்டர் பொறுப்புக்கு வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் கேப்டன் பொறுப்புக்கு வந்த ரஜத் பட்டிதார் இருவரும் சாதித்திருக்கிறார்கள்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக்கின் அணுகுமுறை

தற்போது ஆர்சிபி அணியில் சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை ஒவ்வொருவரும் மென்டர் தினேஷ் கார்த்திகை மிகவும் பாராட்டி வருகிறார்கள். அவர் உற்சாகமானவராகவும் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவராகவும் இருந்து அதை அப்படியே வீரர்களுக்கும் பயிற்சியில் கடத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும் மிக முக்கியமான லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக ஜித்ஷ் ஷர்மா வெறும் 33 பந்தில் 85 ரன்கள் எடுத்து வெல்ல வைத்த பின்பு, தன்னுடைய அணுகுமுறைக்கு பின்னால் தன்னுடைய குரு மற்றும் மென்டர் தினேஷ் கார்த்திக் தான் இருக்கிறார் என்று கூறி பாராட்டி இருந்தால். அந்த அளவிற்கு ஆர்சிபி அணியில் உள் சூழ்நிலையை தினேஷ் கார்த்திக் மாற்றி இருக்கிறார்.

- Advertisement -

இவர் என் கண்களைத் திறந்தார்

இந்த வகையில் தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியின் மறு எழுச்சிக்கு மிக முக்கியமானவராக இருந்த போதிலும் கூட, வேறொரு இளம் வீரர்தான் தன் கண்களை திறந்து இருக்கிறார் என்று மிகவும் பெருந்தன்மையாக கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. பும்ரா வழியில் பயணிக்கும் மயங்க் யாதவ்..காயத்திலிருந்து குணமடைய நடவடிக்கை

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” என்னுடைய கண்களைத் திறந்தவராக ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் இருக்கிறார். அதிகாரமும் பெரிய பொறுப்புகளும் வரும்பொழுது மனிதர்கள் மாறி விடுவது மிகவும் இயல்பானது. அவர்களின் நடத்தை மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ளும் விதம் என ஏதாவது ஒன்று வித்தியாசமாக வெளிப்படும். ஆனால் இவர் அப்படி கிடையாது. கேப்டன் ஆவதற்கு முன்னால் எப்படி இருந்தாரோ இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார். மேலும் இதனால் என் கண்களை திறந்தவராக இருக்கிறார் ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -