இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இளம் இந்திய அணி வெல்லும் என்றும் அதற்கான காரணம் குறித்தும் கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் துவங்க இருக்கிறது. இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முதல் தொடரை முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
இரு அணியின் சாதக பாதகம்
இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது அனுபவ பேட்ஸ்மேன் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது. அதே சமயத்தில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் இங்கிலாந்து கள்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பது பாசிட்டிவான விஷயமாக இந்தியாவிற்கு இருக்கிறது. மேலும் பவுலிங் யூனிட் சரியான அனுபவத்துடன் காணப்படுகிறது.
இங்கிலாந்து அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது அனுபவம் வாய்ந்த அணியாகவும் அதே சமயத்தில் உள்நாட்டில் விளையாடுவதும் அந்த அணிக்கு பெரிய பாசிட்டிவாக இருக்கிறது. ஆனால் முதல் இரண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னணி வேகபந்து பேச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது பின்னடைவான விஷயமாக அமைகிறது. மேலும் இங்கிலாந்து சில காலமாக உள்நாட்டில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்களை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியே வெல்லும்
இதுகுறித்து மான்டி பனேசர் பேசும் பொழுது “இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இந்திய அணியில் சில வீரர்களுக்கு இருப்பது அந்த அணிக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதன் காரணமாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என்று நினைக்கிறேன். அவர்கள் இந்த டெஸ்ட் தொடரை 2-0 என வெல்லுவார்கள் என்று தோன்றுகிறது”
இதையும் படிங்க : விராட் சச்சின் கிடையாது.. என்னால சமாளிக்க முடியாத இந்திய வீரர் இவர்தான் – ஆண்டர்சன் கருத்து
“அதே சமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சீமிங் கண்டிஷனை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? என்பது முக்கியம். எனவே இதில் நிறைய கடின உழைப்பை கொடுக்க வேண்டியது இருக்கும். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பச்சையான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டால் இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு இருக்கும். ஆனால் பேட்டிங் செய்ய சாதகமான தட்டையான ஆடுகளம் கொடுக்கப்பட்டால் இந்திய அணி தொடரை வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.






