2026 டி20 உலக கோப்பை தகுதி சுற்று.. 10 ஓவரில் 10 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன அணி.. மோசமான சாதனை

0
201
Mongolia

தற்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு ஆசிய கிரிக்கெட் நாடுகளுக்கான தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆகி மங்கோலியா மோசமான சாதனை படைத்திருக்கிறது.

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. 12 அணிகள் நேரடியாக பங்கேற்க இருக்கும் நிலையில் 8 அணிகளுக்கு தகுதி சுற்று போட்டிகள் நடைபெற ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -

20 அணிகள் வியூகம்

டி20 கிரிக்கெட் மிகவும் குறைந்த நேரத்தில் முடிகின்ற போட்டியாக இருக்கின்ற காரணத்தினால், மேலும் டி20 கிரிக்கெட்டுக்கு குறைவான அளவு சவால்கள் இருக்கின்ற காரணத்தினால், புதிய கிரிக்கெட் நாடுகள் உருவாவதற்கு சாதகமாக இருக்கிறது. இதனால் கிரிக்கெட் பல நாடுகளுக்கும் சென்று சேர்கிறது.

எனவே இதன் அடிப்படையில் ஐசிசி புதிய கிரிக்கெட் நாடுகளை உருவாக்கி ஐசிசி உலகக்கோப்பைக்கு கொண்டு வரும் கொண்டுவரும் பொருட்டு, டி20 உலகக்கோப்பையில் 20 அணிகளை பங்கேற்க வைக்கிறது. இந்த முடிவின் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அணிகளுடன் விளையாடுவதை நினைத்துப் பார்க்க முடியாத சிறிய அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

- Advertisement -

மங்கோலிய அணியின் மோசமான சாதனை

இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு நடைபெற்ற தகுதி சுற்றில் சிங்கப்பூர் மற்றும் மங்கோலிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் மங்கோலிய அணி 10 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த ஸ்கோரில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை உருவாக்கி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹாங்காங் அணிக்கு எதிராக 14.2 ஓவரில் 17 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகியிருந்தது. மேலும் குறைந்த ஸ்கோரில் ஆல் அவுட் ஆன அணிகளுக்கான டாப் 10 பட்டியலில் மங்கோலியா அணி மட்டுமே நான்கு முறை இடம்பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா வந்த நியூசிலாந்து அணிக்கு.. ஆப்கானிஸ்தான் டீம் செய்த நெகிழ்ச்சி காரியம்.. ரசிகர்கள் பாராட்டு

இந்த போட்டியில் சிங்கப்பூர் அணியின் தரப்பில் 17 வயது லெக் ஸ்பின்னர் ஹர்ஷா பரத்வாஜ் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார். மங்கோலிய தரப்பில் ஐந்து பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக எந்த பேட்ஸ்மேனும் 2 ரன்னை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -