இன்று 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. இதற்குப் பிறகு 10 அணிகளின் கையில் இருக்கும் மீதி பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
இந்த வருடம் ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த முறை ஒவ்வொரு அணிகளும் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில அணிகள் ஆறு வீரர்களையும், ஒரு அணி இரண்டே வீரர்களை மட்டும் தக்க வைத்திருக்கிறது.
பணத்தில் உச்சம் தொட்ட பஞ்சாப்
இந்த முறை பஞ்சாப் அணி ஷஷாங்க் சிங் 5.5 கோடி, பிரப்சிம்ரன் சிங் 4 என இரண்டு வீரர்களை மட்டுமே 9.5 கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருக்கிறது. தற்பொழுது அந்த அணியின் கையில் 110.50 கோடி ரூபாய் மீதப்பணம் இருக்கிறது. எனவே இந்த ஏலத்தில் வரக்கூடிய நட்சத்திர வீரர்களில் இருவரையாவது பஞ்சாப் அணி வாங்கும்.
இதற்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து வீரர்களையும் ஒரு அன்கேப்டு வீரரையும் தக்க வைத்து மொத்தம் 79 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது. அந்த அணியின் கையில் தற்போது 41 கோடி ரூபாய் மட்டுமே இருக்கிறது. 10 அணிகளில் ராஜஸ்தான் அணியிடம் குறைந்த தொகை இருக்கிறது.
வித்தியாசமாக யோசித்த கொல்கத்தா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போலவே கொல்கத்தா அணியும் ஆறு வீரர்களை தக்க வைத்தது. ஆனால் அதில் ஹர்ஷித் ரானா மற்றும் ரமன்தீப் சிங் என இருவர் அன் கேப்டு பிளேயர்கள். எனவே ஆறு வீரர்களுக்கும் சேர்த்து அந்த அணி 69 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. அதே ஆறு வீரர்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 79 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறது.
இதையும் படிங்க : 2025 ஐபிஎல் தக்கவைக்கப்படாமல்.. மெகா ஏலத்திற்கு வரும் 17 நட்சத்திர வீரர்கள்.. முழு பட்டியல்
பத்து அணிகளிடம் மீதமிருக்கும் பணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் – 55
டெல்லி கேப்பிட்டல்ஸ் – 73
குஜராத் டைட்டன்ஸ் – 69
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 51
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 69
மும்பை இந்தியன்ஸ் – 45
பஞ்சாப் கிங்ஸ் – 110.5
ராஜஸ்தான் ராயல்ஸ் – 41
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 83
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 45






