எனக்கும் பணம்தான் முக்கியம்.. டி20 லீக் விளையாட ஓய்வு பெறுவாங்க – இந்திய முன்னாள் வீரர் அதிரடி பேட்டி!

0
2801
Hales

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. நீண்ட வருடத்திற்கு பிறகு உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேலஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். மேலும் அந்தத் தொடரில் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாடி வரும் அவர் நேற்று திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. அவர் இதுவரை இங்கிலாந்துக்காக 11 டெஸ்ட், 70 ஒருநாள் கிரிக்கெட் போட்டி 75 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இருக்கிறது. அடுத்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை இருக்கிறது. எப்படியும் ஒரு உலகக் கோப்பையிலாவது அவருக்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். இப்படி இருந்தும் அவர் திடீர் ஓய்வு முடிவை அறிவித்தது எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” இது கொஞ்சம் சீக்கிரம் அறிவிக்கப்பட்ட முடிவா? 34 வயது என்பது இன்னும் ஒரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீட்டிக்க முடியும் வயது என்று நீங்கள் நினைப்பீர்கள். அவர் வருகின்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு விளையாட விட்டாலும் கூட, நிச்சயம் அடுத்த வருடம் நடக்கும் டி20 உலக கோப்பைக்கு ஒரு வலுவான வேட்பாளராக இங்கிலாந்து அணிக்குள் இருந்திருப்பார்.

இதில் ஒரு விஷயம் நிச்சயம். இது தற்பொழுது வளர்ந்து வரும் ஒரு விஷயம். இது மேலும் வளரவே செய்யும். ஏனென்றால் ஒரு வீரருக்கு இப்பொழுது உலகில் எல்லா இடத்திலும் டி20 லீக்குகள் உண்டு. உங்களுக்கு அமெரிக்காவில் கூட லீக் உண்டு. அடுத்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை என்று லீக்குகள் நிறைய இருக்கிறது.

- Advertisement -

இதுபோன்று உங்களிடம் நிறைய தேர்வுகள் இருந்தால், நீங்கள் உங்களுக்கு தேவையான மாதிரி தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வளவு லீக்குகள் இருக்கும் பொழுது நீங்கள் வருடம் முழுவதும் பிஸியாக இருக்கலாம். எங்கள் கிரிக்கெட் வீரராக கிரிக்கெட் விளையாட விரும்புகிறீர்கள் அதைத்தான் செய்கிறீர்கள். எனக்கு ஏ ஆப்ஷன் பி ஆப்ஷனை விட அதிகம் பணம் தருகிறது என்றால் நான் ஏ ஆப்ஷன் உடன் செல்வதில்தான் மகிழ்ச்சி அடைவேன். அதனால் இதெல்லாம் தவறான விஷயம் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!

டி20 கிரிக்கெட் வடிவம் அறிமுகமான பிறகு கிரிக்கெட் பல நாடுகளுக்கும் சென்றுள்ளது. மேலும் கிரிக்கெட் வணிக ரீதியாகவும் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் கிரிக்கெட்டை தொழிலாகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது. மேலும் நிறைய புதிய இளைஞர்கள் கிரிக்கெட்டை தொழிலாக கொள்வதற்கு தைரியமாக உள்ளே வருகிறார்கள். எனவே இனி படிப்படியாக சர்வதேச கிரிக்கெட்டுக்கான மதிப்புகள் குறைந்து இப்படியான டி20 லீக்குகளின் மதிப்புகள் அதிகரிக்கவே செய்யும்!