நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் குஜராத் அணி வீரர் முகமது சிராஜ் சாம்பியன்ஸ் ட்ராஃபி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நிலையில் அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. துபாய் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரோஹித் சர்மா சுழற் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை தனது அணியில் தேர்ந்தெடுத்தார். இதனால் குறைந்த அளவு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதில் இந்திய அணியின் முன்னணி பவுலராக திகழ்ந்த முகமது சிராஜ்க்கு அந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையிலும் நாக் அவுட் போட்டிகளில் முகமது சிராஜ் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசிய சிராஜ் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 54 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் தேர்ந்தெடுக்கப்படாத விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ரோஹித் பாய் இந்திய அணிக்கு எது சிறந்ததோ அதனையே செய்கிறார். அதனால்தான் அவர் சுழற் பந்துவீச்சாளர்களை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு தகுந்தவாறு செயல்பட்டார். அவருக்கு கிரிக்கெட்டை பொருத்தவரை நிறைய அனுபவம் உள்ளது. மேலும் அந்த ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்களின் பயன் அதிகம் இருக்காது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
இதையும் படிங்க:வைட் யார்க்கர் பந்துகளை வீசும் திட்டமே.. அவர் சொல்லிதான் செஞ்சோம்.. இதுதான் வெற்றிக்கு காரணம் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
அதற்கு மாறாக சுழற் பந்து வீச்சாளர்கள் அதிக பயனுள்ளதாக இருப்பார்கள் என்று அவருக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவர்கள் என்னை ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர்” என்று முகமது சிராஜ் பேசியிருக்கிறார். குஜராத் அணி சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஏலத்தில் சிராஜை 12.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் முதல் போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்திருப்பது சற்று சிக்கலை உருவாக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.






