தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் கேஎல் ராகுலுக்கு இருந்ததை விட ரிஷப் பண்டுக்கு கூடுதல் அழுத்தம் இருக்கப் போவதாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்திருக்கிறார்.
இந்த முறை நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டு ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். பஞ்சாப் அணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ரிஷப் பண்ட்டுக்கு அழுத்தம் அதிகம்
இதுகுறித்து முகமது கைஃப் கூறும் பொழுது ” கேஎல்.ராகுல் கேப்டனாக இருந்த பொழுது அந்த அணி மூன்று வருடத்தில் இரண்டு முறை முதல் நான்கு இடங்களில் வந்து பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட்டது. மூன்றாவது முறையாக அந்த அணியின் உரிமையாளர்கள் அவர்களது அணியை முதல் இரண்டு இடங்களில் கொண்டு வருவதை விரும்பினார்கள். பிளே ஆப் சுற்றுக்கு இரண்டு முறை அழைத்துச் சென்ற கேப்டனாக இருந்த போதிலும் கேஎல்.ராகுலை அவர்கள் நீக்கிவிட்டார்கள்”
“எனவே இந்த முறை கேப்டனாக ரிஷப் பண்ட் வந்தால் அவர் லக்னோ அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அது கடினமான ஒன்றாக மாறிவிடும். அதற்காகவே அவரை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். எனவே இந்த அழுத்தம் அவர் மீது அதிக அளவில் இருக்கும்”
லக்னோ அணியின் ஒரே பிரச்சனை
“லக்னோ தற்பொழுது ஒரு நல்ல அணியை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அணியில் நான் பார்க்கும் ஒரே பிரச்சனை சர்வதேச வேகப்பந்துவீச்சாளர்கள் சரியானவர்கள் யாரும் இல்லை. அவர்களிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். மேலும் ரவி பிஸ்னாய் மற்றும் சித்தார்த், ஷாஅகமது போன்ற சுழல் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க: விராட் பிரச்சனையே வேற.. குறைவா நினைக்காதிங்க.. இதனால மாஸ் பண்ண போறாரு – ஆஸிக்கு டிராவிட் மறைமுக எச்சரிக்கை
“அந்த அணியில் மயங்க் யாதவ், மோசின் கான், ஆவேஸ் கான், ஆகாஷ் தீப் போன்ற இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு ஸ்டார்க், ஹேசில்வுட் போன்ற தரமான வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாததுதான் குறையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






