முகமது சிராஜ் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன் பந்துவீச்சு குறித்து வெளியில் சென்று கொண்டிருந்த பேச்சுகளுக்கு பதில் அளிக்க விரும்பியதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த தொடரில் பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடாத நிலையில், அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அவர் விளையாடாத இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்தது. இதற்கு முக்கிய காரணமாக முகமத் சிராஜ் இருந்தார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு திரும்பியிருக்கும் முகமது சிராஜுக்கு இந்திய டி20 அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராக இருந்த ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி வருகிறது.
இந்த நிலையில் பும்ரா இல்லாத பொழுது தன் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து முகமது சிராஜ் பேட்டியளித்திருக்கிறார். மேலும் பொதுவாக தான் எப்படி இருக்க விரும்புவதாகவும் அதே சமயத்தில் சிக்கலான நேரத்தில் என்ன செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து முகமது சிராஜ் பேசும்பொழுது “பும்ரா பாய் இல்லாத பொழுது எனக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டானது. எப்பொழுதும் பொறுப்புகளை விரும்புகிறேன். அது என்னை கூடுதலாக செயல்பட வைக்கிறது. எட்ஜ்பஸ்டன் டெஸ்ட் போட்டியில் மக்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது என சொல்லி இருந்தேன். நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு பொதுவாகவே நன்றாக தெரியும்”
இதையும் படிங்க : 2 போட்டியிலும் இந்தியாவை தோற்கடிப்போம்.. இந்த முறை மிஸ் ஆகாது – ஹாரிஸ் ரவுப் பேச்சு
“நான் மக்கள் பேசுவதை அதிகம் கண்டுகொள்ள மாட்டேன். அதே சமயத்தில் மக்கள் பேச்சுகள் அதிகமாகும் பொழுது அதை நிறுத்த வேண்டியதும் நம்முடைய பொறுப்பு தான். எனவே நான் அதை நிறுத்த விரும்பினேன். பும்ரா பாய் களத்தில் இல்லாத பொழுது என்னுடைய பொறுப்புகள் அதிகரித்தது. எனவே நான் என் பந்து வீச்சு குழுவுடன் மைதானத்தில் அதிகம் பேசினேன். நம்மால் ஏற்கனவே செய்ய முடிந்ததை இப்பொழுதும் செய்ய முடியும் என நம்பிக்கை ஊட்டினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.