நேற்று பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தி ஆகாஷ் தீப் நடந்து கொண்ட இடம் குறித்து இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் மார்க்கஸ் ட்ரஸ்கோதிக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தற்போது 23 ரன்கள் பின்னலையில் இருந்த இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால் தற்போது போட்டி மிகவும் விறுவிறுப்பாக மாறி இருக்கிறது.
ஆகாஷ் தீப் நடந்த விதம்
நேற்று இங்கிலாந்து அணி விளையாடிக் கொண்டிருந்த பொழுது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பென் டக்கெட்டிடம் பேச்சுவார்த்தையில் களத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அது பெரிய அளவில் செல்லவில்லை. அதே நேரத்தில் பெண் டக்கெட் அதிரடியாக விளையாடி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் ஆகாஷ் தீப் பென் டக்கெட் வைக்கட்டை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து களத்திலிருந்து அவர் வெளியேறும் பொழுது ஆகாஷ் டீப் அவருடைய தோல் மேல் கை போட்டு நட்புடன் ஏதோ பேசுவது போல பேசினார். அதற்கு பென் பக்கெட் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வெளியேறினார்.
இங்கிலாந்து துணை கோச் கருத்து
இதுகுறித்து இங்கிலாந்து துணை பயிற்சியாளர் மார்க்கஸ் ட்ரஸ்கோதிக் கூறும்பொழுது ” என் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருந்தால் தோள் மேல் போட்ட முழங்கையை பல வீரர்கள் தட்டி விட்டு இருப்பார்கள். ஒரு பந்துவீச்சாளர் அவுட் செய்த பிறகு பேட்ஸ்மேனிடம் இவ்வாறு நடந்து கொண்டதை நான் பார்த்தது கிடையாது”
இதையும் படிங்க : ரூட் பிரசித் கிருஷ்ணா மோதல்.. ஒரு வார்த்தைக்கு இப்படியா பண்றது? – தினேஷ் கார்த்திக் விளக்கம்
“இந்த தொடரில் பந்துவீச்சாளர்கள் பல வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். இருந்த போதிலும் டக்கெட் இது குறித்து பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர் தலையை குனிந்த படி வெளியேறிவிட்டார். ஆனால் அப்படி அவர் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறி இருக்கிறார்.






