இந்திய கிரிக்கெட் அணியில் முகமது சிராஜ் ஒரு முக்கிய பவுலராக இருக்கின்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நம்பர் ஒன் தரவரிசை இடத்தை பிடித்த சிராஜ், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தம்மை ஒரு முன்னணி பவுலராக நிலை நிறுத்த போராடினார். இதுவரை 37 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ள சிராஜ் மொத்தமாக 101 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இதில் அவருடைய பந்துவீச்சு சராசரி 31 என்ற அளவில் இருக்கின்றது. இந்த தருணத்தில் சிராஜ் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சிராஜுக்கு பழைய பந்தை சரியாக பயன்படுத்த தெரியவில்லை என ரோகித் சர்மாவே ஒரு முறை குறை கூறியிருந்தார்.
தடுமாறும் சிராஜ்:
இதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிராஜ் நீக்கப்பட்டார். இந்த தருணத்தில் ஐபிஎல் தொடரில் தன்னுடைய பார்மை நிரூபித்த சிராஜ், இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். எனினும் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது பும்ராவின் பந்துவீச்சு மட்டும் தான் எடுபட்டது.
மற்ற வீரர்களின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக எதிர் கொண்டனர். ஒரு கட்டத்தில் சிராஜ் ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் கொடுத்திருந்தார். தற்போது மூன்றாவது நாள் மதிய உணவு இடைவெளி வரை 19 ஓவரின் வீசி 73 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் தான் வீழ்த்தி இருக்கிறார். இது இந்திய அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
கோலி இருந்தால் கதையே வேறு:
இந்த தருணத்தில் தான் சிராஜ் விராட் கோலி அணியின் இருக்கின்றபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. அதாவது விராட் கோலி அணியில் இருக்கும் போது சிராஜ் 51 இன்னிங்ஸில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதையும் பாருங்க: நான் கம்பீர் இடத்துக்கு வரணும்.. இப்ப தயார் ஆயிட்டேன்.. காரணம் இதுதான் – கங்குலி வெளிப்படை பேச்சு
இதில் அவருடைய பந்துவீச்சு சராசரி வெறும் 29 என்ற அளவில் இருக்கின்றது. ஆனால் விராட் கோலி டெஸ்ட் அணியில் இல்லாத போது சிராஜ் 17 இன்னிங்ஸில் பந்துவீசி வெறும் 19 விக்கெட்டுகளை மட்டும் தான் விழித்திருக்கிறார். இதில் அவருடைய பந்துவீச்சு சராசரி 39 என்ற அளவில் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 71 என்ற அளவிலும் மோசமாக இருக்கின்றது. இதன் காரணமாக விராட் கோலி அணியில் இருக்கும் போது தான் சிராஜ்க்கு அவர் நல்ல வழிகாட்டுதலை தருவார் என்பது தெளிவாக தெரிகிறது.






