ஐபிஎல் 2025

விராட் கோலிக்கு எதிரா.. முதல் முறையாக இதை செய்ய ரொம்ப ஆர்வமா இருக்கேன்.. என் ரோல் இதான் – சிராஜ் பேட்டி

இந்த ஆண்டு ஆர்சிபி அணியில் கழட்டி விடப்பட்ட முகமது சிராஜ் 12.25 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். இந்த நிலையில் முதல் முறையாக விராட் கோலிக்கு எதிராக விளையாட இருப்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் பழைய பந்தில் தாக்கம் கொடுப்பதில்லை என்று கூறி முகமது சிராஜை இந்திய கிரிக்கெட்டின் வெள்ளை பந்து அணிகளில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தன்னை ஐபிஎல் தொடரில் நிருபித்து மீண்டும் இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்குள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது.

விராட் கோலிக்கு எதிராக வருகிறேன்

இது குறித்து பேசி இருக்கும் முகமது சிராஜ் கூறும் பொழுது “நான் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது வலைகளில் விராட் கோலிக்கு நிறைய பதிவு செய்ய இருக்கிறேன். இப்போது முதல் முறையாக அவருக்கு எதிராக ஒரு போட்டியில் நான் விளையாட இருக்கிறேன். இது நடக்கும் பொழுது மிகவும் வேடிக்கையாக இருக்கும். நான் இதற்காக மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன்”

“அதே சமயத்தில் எங்களுடைய கேப்டன் கில் சிறந்தவராக இருக்கிறார். அவர் பந்துவீச்சாளர்களுக்கான கேப்டனாக இருக்கிறார். நாங்கள் எதை கேட்டாலும் அதை கொடுக்கக் கூடியவராகவும், எங்களுக்கு அதிகபட்ச சுதந்திரத்தை வழங்க கூடியவராகவும் இருக்கிறார். எங்களுடைய பிணைப்பு மிக நன்றாக இருக்கிறது. இந்திய அணி விளையாடும் பொழுது நான் கில் மற்றும் ரிஷப் பண்ட் இரவு உணவுக்கு ஒன்றாக செல்லும் அளவுக்கு நண்பர்கள்”

- Advertisement -

என்னுடைய ரோல் இதுதான்

“உண்மையைச் சொல்வது என்றால் என்னுடைய அணியில் ரபாடா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் இங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். புதிய பந்தில் நான் பந்து வீசும் பொழுது தொடக்கத்தில் அதிக விக்கெட் வீழ்த்துவது என்னுடைய பணியாக இருக்கும். இதன் மூலம் எதிரணிக்கு அழுத்தத்தை நான் உருவாக்க வேண்டும்”

இதையும் படிங்க : கில்லின் கேப்டன்சிக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. என் வழி ஜாண்டி ரோட்ஸ் வழி – பிலிப்ஸ் பேட்டி

“அதே சமயத்தில் ஒருவேளை நான் விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டால், அதிக டாட் பந்துகளை வீசி அழுத்தத்தை அதிகரிக்கும் வேலையை செய்ய வேண்டும். இருந்தபோதிலும் என்னுடைய நோக்கம் என்னவென்றால் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றி அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts