இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட் கைப்பற்றிய முகமது சிராஜ் தனது பந்துவீச்சு குறித்து பேசி இருக்கிறார்.
தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் போட்டியில் மீதம் இரண்டு நாட்களும் இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகளும் இருக்கின்ற காரணத்தினால், இந்த போட்டியும் சுவாரசியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.
நான் என்னையும் இவரையும் நம்புகிறேன்
தனது பந்துவீச்சு குறித்து பேசி உள்ள முகமது சிராஜ் கூறும் பொழுது “நான் என்னையையும் பும்ராவையும் எப்பொழுதும் நம்புகிறேன். நான் தற்போது ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சியையும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது. ஏனென்றால் நான் ஒரு ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றுவதற்காக ஒரு வருடமாக காத்திருக்கிறேன். எனவே இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது”
“மேலும் இங்கிலாந்தில் எனக்கு ஐந்து விக்கெட் கிடைத்தது கிடையாது. எனவே இந்த ஆறு விக்கெட் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த விக்கெட் மிகவும் மெதுவாக இருக்கிறது. மேலும் முதன்மை பந்துவீச்சாளராக உங்களுக்கு ஒரு பொறுப்பு கிடைக்கும் பொழுது, நீங்கள் அனுபவம் வாய்ந்தவராக இருக்கும்போது ஏன் விக்கெட் கைப்பற்ற கூடாது? என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருந்தது”
ஆகாஷ் தீப் சொன்ன பதில்
” நான் என்னுடைய பந்துவீச்சில் சரியான லைன் மற்றும் லென்த்தில் இருப்பதற்கு முடிவு செய்தேன். இதைச் செய்யும் பொழுது எதிரணிக்கு அழுத்தத்தை கொண்டு செய்ய முடியும். அதன் மூலம் விக்கெட் கொண்டு வர முடியும். எனவே என்னுடைய திட்டம் இதுவாகத்தான் இருந்தது”
இதையும் படிங்க : எங்க இங்கிலாந்து தோக்கணும்.. இந்தியா ஜெயிச்சு 1-1 ஆகணும்.. காரணம் இதுதான் – மைக்கேல் வாகன் பேச்சு
“மேலும் நான் ஐந்தாவது விக்கெட் கைப்பற்றிய பிறகு அந்த ஓவரில் மேலும் ஐந்து பந்துகள் இருந்தது. எனவே ஆகாஷ் தீப் ஐந்து விக்கெட் கைப்பற்றுவதற்காக மீதமுள்ள பந்துகளை வெளியில் வீசி விடவா? என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அதற்கு அவர் என்னுடைய விதியில் இருந்தால் அந்த விக்கெட் கிடைக்கும். எனவே நீங்கள் எப்பொழுதும் போல வீசுங்கள் என்று கூறினார். நானும் அப்படியே செய்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.






