இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றும் தொடர் சமநிலை ஆக வேண்டும் எனவும் ஆச்சரியப்படும் விதமாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்க இந்திய அணியின் கையில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகள் இருக்கிறது. எனவே இங்கிலாந்து அணிக்கு 500 ரன்கள் இலக்கை நிர்ணயித்து இந்திய அணி வெற்றி பெற முடியும் என்ற வாய்ப்பும் இருக்கிறது.
இந்திய அணி வெல்ல வேண்டும்
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதற்கு இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் அவர் விரிவாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். தொடர் சமநிலை அடைந்து மூன்றாவது போட்டியில் லார்ட்ஸ் மைதானத்திற்கு செல்ல வேண்டும். அனேகமாக அந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு பும்ரா விளையாடுவார். இந்தியா மூன்று நாட்களாக விளையாடிய அதே தீவிரமான கிரிக்கெட்டையும், இந்த மனநிலையையும் தொடர முடிந்தால், வாரத்தில் இங்கிலாந்திடம் சரியான கேள்விகளை கேட்டு தொடரை சமன் செய்ய முடியும்”
கில் தரும் இலக்கு இதுதான்
“பாருங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் 420 ரன்கள் தாண்டி துரத்தியது இல்லை. எனவே நாம் 450 ரன்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்திய அணி 500 ரன்கள் இலக்கு கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன். நேற்று இந்தியா கடைசியாக பேட்டிங் செய்த விதம் எனக்கு பிடித்திருந்தது. அவர்கள் மிகவும் தைரியமாக தங்களுடைய ஷாட்களை விளையாடினார்கள்”
இதையும் படிங்க : சிராஜிடம் நான் கவனித்த பெரிய மாற்றம் இதுதான்.. அதுக்கான பரிசு உடனே கிடைச்சிருக்கு – சச்சின் பாராட்டு
” மேலும் இன்று நான்காவது நாளில் இங்கிலாந்து அணியின் விக்கெட் எதையும் வீழ்த்தாமல் இருப்பதை நான் கேப்டன் ஆக விரும்ப மாட்டேன். எனவே நீங்கள் இன்று இங்கிலாந்து அணியை விளையாட வைக்க வேண்டும். அவர்களின் இரண்டு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு தேவையான நேரத்தை எடுக்க வேண்டும். இங்கிலாந்து அணி இப்பொழுது சோர்வாக இருந்தால், அடுத்தடுத்த வாரத்தில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியது இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






