இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் முகமது ஷமி மோசமான சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் தனிப்பட்ட சாதனையையும் படைத்திருக்கிறார்கள்.
இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
இன்றைய போட்டியில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக காணப்பட்டது. இதனால் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் செய்வது என அறிவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஸ் ஆர்யா 13 பந்தில் 36 ரன்கள், பிரப்ஸிம்ரன் சிங் 23 பந்தில் 42 ரன்கள் எடுத்து வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்தி ஆட்டம் இழந்தார்கள்.
இதைத் தொடர்ந்து ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 22 பந்துகளில் அதிரடியாக அரை சதம் அடித்தார். அவருடைய ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்தில் அடிக்கப்பட்ட அரை சதமாக இது பதிவானது. இதற்கு அடுத்து இவருடன் இணைந்து விளையாடிய நெகேல் வதெரா 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழந்ததும் கடைசி கட்டத்தில் ஹைதராபாத் அணி பந்துவீச்சில் முன்னேறி வந்தது. 19ஆவது ஓவரை வீசிய கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தினார். இந்த நிலையில் இருபதாவது ஓரை பந்து வீச முகமது ஷமி வந்தார். இந்த ஓவர்களின் கடைசி நான்கு பந்துகளை எதிர் கொண்ட ஸ்டோய்னிஸ் நான்கு பந்துகளையும் சிக்ஸர் அடித்தார். இறுதியாக பஞ்சாப் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க: பிளான்னா இப்படி இருக்கணும்.. சிஎஸ்கேவுக்கு பாடம் எடுத்த ரிஷப் பண்ட்.. மீண்டு வந்தது எப்படி?
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளராக ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக 76 ரன்கள் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று ஷமி நான்கு ஓவர்களில் 75 ரன்கள் கொடுத்திருக்கிறார். இந்திய பவுலர்களில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் கொடுத்தவராக மோசமான சாதனை படைத்திருக்கிறார். ஒரே ஒரு ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சரின் மோசமான சாதனையில் இருந்து தப்பித்திருக்கிறார்.