இந்திய நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தன்னுடைய பிட்னஸ் குறித்து இந்தியத் தேர்வுக்குழுவுக்கு அப்டேட் தருவது தன்னுடைய வேலை இல்லை என கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா வெள்ளைப் பந்து தொடர்களுக்கு இந்திய அணிகளில் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் அவர் குறித்த எந்த தகவல்களும் தனக்கு தெரியாது என இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். தற்போது இது குறித்து முகமது ஷமி வருத்தத்துடன் பேட்டி அளித்திருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் முகமது ஷமி கூறும் பொழுது ” நான் இதை முன்பே தெரிவித்து இருக்கிறேன். தேர்வு என்னுடைய கையில் கிடையாது. எனக்கு உடல் தகுதி பிரச்சனை இருந்திருந்தால் நான் பெங்கால் அணிக்காக விளையாடி இருக்க முடியாது. இதைப் பற்றி பேசி நான் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. நான்கு நாட்கள் கொண்ட ரஞ்சி போட்டியை என்னால் விளையாட முடியும் பொழுது ஒருநாள் போட்டியையும் என்னால் விளையாட முடியும்”
“என் குறித்த அப்டேட்டை வழங்குவது அல்லது அப்டேட்டை தெரிந்து கொள்வது என்னுடைய வேலை கிடையாது. உடல் தகுதி தொடர்பாக என்சிஏ சென்று நிரூபிப்பது மற்றும் விளையாடுவது மட்டுமே என்னுடைய வேலை. தேர்வுக் குழுவுக்கு யார் அப்டேட் கொடுக்கிறார்களோ அது அவர்களுடைய வேலை. அது அவர்களுடைய பொறுப்பு”
“உங்கள் நாட்டிற்கு சிறந்ததை நீங்கள் எப்பொழுதும் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுவேன். இது நாடு சம்பந்தப்பட்ட விஷயம். நம்முடைய நாடு வெல்ல வேண்டும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் எப்பொழுதும் சொல்வேன்”
இதையும் படிங்க: 7 விக்கெட் 226 ரன்.. தென் ஆப்பிரிக்கா மீளுமா?.. இந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான் அணி.. முதல் டெஸ்ட்
“சண்டையிட்டுக் கொண்டே இரு; விளையாடிக் கொண்டே இரு. மிகச் சிறப்பாக செயல்பட்டால் அது உனக்கு பலன் அளிக்கும். நான் போட்டிகளுக்கு தயாராகி விளையாட மட்டுமே முடியும். எனக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. நாளை இந்திய அணிக்கு விளையாடாவிட்டால் நான் பெங்கால் வந்து இங்கு விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.