பும்ரா கூட கிடையாது.. நிஜமா எனக்கு பிடிச்ச 2 பாஸ்ட் பவுலர் இவங்கதான் – முகமது ஷமி விருப்பம்

0
370
Shami

இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டில் மிகவும் தனித்துவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி தற்காலத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு பிடித்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர் யார் என குறிப்பிட்டு இருக்கிறார்.இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டில் மிகவும் தனித்துவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி தற்காலத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு பிடித்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர் யார் என குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் முகமது ஷமி தனக்கு பிடித்ததாக கூறியுள்ள இரண்டு வேகப்பந்து வீச்சாளரில் ஒருவர் கூட இந்திய வேகப் பந்துவீச்சாளர் கிடையாது. குறிப்பாக சமகாலத்தில் அவருடன் இணைந்து பந்து வீசும் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ராவையும் சமி தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தியாகி முகமது ஷமி

2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் பொழுது அவருடைய காலில் காயம் இருந்தது. ஆனால் அவருடைய தேவை அணிக்கு இருந்த காரணத்தினால் அவர் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய செல்லாமல், ஊசி மட்டும் போட்டுக் கொண்டு இந்தி அணியில் தொடர்ந்தார்.

முதல் சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத முகமது ஷமி அடுத்து தனக்கு வாய்ப்பு கிடைத்த ஏழு போட்டிகளில் நெருப்பு மாதிரி பந்து வீசி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் விளையாடும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்திய அணியின் செயல்பாடு வேறொரு லெவலுக்கு அந்த உலகக் கோப்பையில் மாறி இருந்தது. அதே வேளையில் அவருடைய காயமும் பெரிதாக இருந்தது.

- Advertisement -

தனக்குப் பிடித்த வேகப்பந்துவீச்சாளர்கள்

இப்படியான நிலையில் முகமது ஷமியில் லண்டன் சென்று காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து நீண்ட நாட்கள் மறு வாழ்வில் இருந்தார். தற்சமயம் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியை தீவிரப் படுத்திக் கொண்டே வந்த முகமது ஷமி ரஞ்சி டிராபியில் தன்னுடைய மாநில அணியான பெங்கால் அணிக்கு முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவதாக அறிவித்திருக்கிறார். அனேகமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நேரடியாக இடம் பெறுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கைநழுவிய கப்.. 2 தமிழக அணிகள்.. இரண்டும் செமி பைனலில் தோற்ற சோகம்.. புச்சி பாபு 2024

இந்த நிலையில் தனக்குப் பிடித்த வேகப்பந்துவீச்சாளர்கள் யார்? என்று குறிப்பிட்டுள்ள முகமது ஷமி கூறும் பொழுது ” பிடித்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் நிறைய பேரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பேரை மட்டுமே சொல்ல வேண்டும் என்றால் எனக்கு தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் மற்றும் பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ் இருவரையும் பிடிக்கும்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -