இந்திய அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட வீரரை கட்டாயம் இனி விளையாட வைத்தே ஆக வேண்டும் என முகமது கைஃப் மிகவும் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்வதற்கு அதிகபட்ச வாய்ப்பில் இருந்தும் போட்டியை தோற்றது. இதன் காரணமாக இந்திய அணியின் அணுகுமுறை மற்றும் அணி தேர்வு குறித்து விமர்சனங்கள் இருந்து வருகிறது.
இந்திய ஸ்பின்னர்கள்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஓய்வு பெற்ற பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் முக்கிய சுழல் பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள். தற்போது இதில் அஸ்வின் ஓய்வு பெற்றுவிட ஜடேஜா மட்டும் விளையாடுகிறார்.
அதே சமயத்தில் இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் பொழுது அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் வெளிநாட்டு டெஸ்ட் வரும் பொழுதும் இவர்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் வெளிநாட்டு டெஸ்டில் ஜடேஜா மற்றும் அஸ்வின் சிறப்பாக இல்லை.
எட்டு வருடமாக நடந்தது போதும்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 2018 ஆம் ஆண்டு குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அப்போது இருந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இனி வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இருப்பார் என்று கூறினார். ஆனால் இது தன்னை காயப்படுத்தியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : நான் ஒரு தப்பு செஞ்சேன்.. அது எல்லாருக்கும் உதாரணமா இருக்கணும்.. இனி இதை செய்யணும் – கில் பேச்சு
இதுகுறித்து முகமது கைப் கூறும் பொழுது ” இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை என்றால் அது நியாயமற்றது. அவர் எட்டு ஆண்டுகளில் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். முன்னதாக அஸ்வினுக்காக அவரை சேர்க்கவில்லை. இப்போதும் அவரை அணியில் இருந்து விலக்கினால் எப்படி நியாயப்படுத்துவீர்கள்?” என்று கூறி இருக்கிறார்.






