இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய அணி முழுவதுமாக தயாரான நிலையில், இந்திய அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கேப்டன் சுப்மன் கில் அறிவுறுத்தி இருக்கிறார்.
கம்பீருக்கான நெருக்கடி
தற்போது இந்திய அணியின் பவுலிங் யூனிட் பும்ராவை தவிர பலவீனமாக இருக்கிறது. பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டை இழந்து பெரிய அளவில் ரன் கொடுத்து வருகிறார்கள். மேலும் இங்கிலாந்தில் தட்டையான ஆடுகளம் அமைக்கப்படுகின்ற காரணத்தினால் இந்த பிரச்சனை இன்னும் பெரிதாக மாறுகிறது.
மேலும் இந்திய கீழ் வரிசை பேட்டிங் பலவீனமாக இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைவதற்கு இதன் மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது. தற்போது இவற்றை சரி செய்வது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.
டாப் ஆர்டர்கள் பொறுப்பு
இதுகுறித்து கேப்டன் கில் கூறும் பொழுது “நாங்கள் எப்பொழுதும் பேசும் ஒரு விஷயம் என்னவென்றால் என்னுடைய பேட்டிங் கீழ் வரிசையில் பலம் கிடையாது. மற்ற அணிகளை போல எங்கள் வீரர்கள் பங்களிக்க முடியாது. இதை நாம் புரிந்து கொண்டு நாம் மறுபக்கத்தை பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க : முதல் டெஸ்ட் 5 சதங்கள் எங்க போச்சு?.. அந்த ஒரு விஷயத்தை குறைவா எடை போடாதீங்க – அஸ்வின் அறிவுரை
“உதாரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் 147 ரன்கள் எடுத்திருந்த பொழுது ரிஷப் பண்ட் உடன் இணைந்து இன்னும் 50 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் நான் தவறாக விளையாடி ஆட்டம் இழந்தேன். ஒரு நல்ல பந்துக்கு ஆட்டம் இழக்கலாம். ஆனால் தவறான முறையில் ஆட்டம் இழக்கக்கூடாது. இதை நாங்கள் சரி செய்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






