இந்திய கிரிக்கெட்

ஜடேஜாவை விட்டுக் கொடுத்து சாம்சனை வாங்கியது.. இது முழுக்க தோனியின் வேலைதான் – முகமது கைப் பேச்சு

சிஎஸ்கே ஜடேஜாவை கொடுத்துவிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சஞ்சு சாம்சனை வாங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு பின்னணியில் தோனிதான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் என முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது வந்து கொண்டிருக்கிற தகவல்களின்படி, ஜடேஜாவை விட்டுக் கொடுத்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கிவிட்டது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. ஜடேஜா உடன் வேறு எந்த வீரரை சிஎஸ்கே அணி சேர்த்து தந்திருக்கிறது என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.

சஞ்சு சாம்சன்தான் கேப்டன்

இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” இரண்டு வீரர்களுமே 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு வேறு எங்கும் செல்லவில்லை. தற்போது சிஎஸ்கே அணிக்கு பதிவு வந்து விளையாடினால் தோனி அடுத்த ஆண்டு வெளியில் சென்று விடலாம். பாதியில் செல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. சஞ்சு சாம்சன் தோனி மற்றும் அணி நிர்வாகத்துடன் மிகவும் வசதியாக இருப்பார். எனவே அவரையே கேப்டன் ஆகவும் இருக்க செய்யலாம். பல ஆண்டு வீரர் ஜடேஜாவை விட்டு விட்டார்கள். காரணம் அவர்களுக்கு ஒரு கேப்டன் தேவை”

“முன்பு ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்தார்கள். ஆனால் அவரால் அதில் சரியாக செயல்பட முடியவில்லை. எனவே அவர் பொறுப்பு வேண்டாம் என்று கூறிவிட்டார். நீண்ட காலத் திட்டத்தில் தனக்குப் பிறகு சிஎஸ்கே அணிக்கு ஒரு கேப்டன் வேண்டும் என்பதற்காக தோனி ஜடேஜாவை தற்பொழுது தியாகம் செய்துவிட்டார்”

- Advertisement -

இதில் ஜடேஜாவுக்கு சம்மதம்

“மேலும் இது குறித்து ஜடேஜாவின் என்னத்தை அறிவதற்கு அவரிடம் பலமுறை கலந்துரையாடல்களில் தோனி ஈடுபட்டார். ஜடேஜாவும் ராஜஸ்தான் அணிக்கு சென்று விளையாட விரும்பியதால், இந்த பேச்சு வார்த்தைகள் முழுமை அடைந்து இருக்கின்றன”

இதையும் படிங்க : 17 வருஷமா செஞ்ச அந்த தப்பை.. இந்த முறை மாத்துனதாலதான் ஆர்சிபி கப் ஜெயிச்சது – முகமது கைப் பேட்டி

“சஞ்சுவின் பேட்டிங் பாணியை பொருத்தவரையில் அது மற்ற இந்திய விக்கெட் கீப்பர்களை விட அதிரடியானது. மேலும் அவரால் நான்காம் இடம் வரையில் வந்து விளையாட முடியும். மேலும் மிடில் ஓவர்களில் அவரால் பெரிய சிக்ஸர்கள் அடிக்க முடியும். அவர் சிஎஸ்கே அணிக்கு மிகப் பொருத்தமாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by