18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் வெற்றி ரகசியம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகம்மது கைஃப் சில கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 17 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. வழக்கமாக விராட் கோலி அந்த சீசனிலும் சிறப்பாக செயல்பட்டாலும் அவருக்கு பக்கபலமாக மற்ற வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற உதவினார்கள் என்பது முற்றிலுமான உண்மை.
பேட்டிங்கில் சிறப்பான தொடக்கத்தை விராட் கோலி ஏற்படுத்திக் கொடுக்க, மற்ற வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை விளையாடி அதற்கு பின்னர் டிம் டேவிட் இறுதிக்கட்டத்தில் அதிரடியான ஃபினிஷிங்கை பெற்றுக் கொடுத்தது முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், ஜாஸ் ஹாசில் வுட் மற்றும் யஸ் தயால் போன்ற வீரர்கள் நல்ல பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்து முகமது கை சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கடந்த முறை ஏலத்தில் பெங்களூர் அணி செய்த சிறந்த விஷயம் என்னவென்றால், ஏலத்தில் அவர்கள் எப்படி சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதுதான். அவர்கள் ஒரு புது கேப்டனை நியமித்தார்கள். விராட் கோலி உடனான அவரது பிணைப்பும் நன்றாக இருந்தது. அணியின் வரலாற்றில் இதற்கு முன்பு நடக்காதது முந்தைய முறை நடந்தது. பந்து வீச்சாளர்கள் அதிக பங்களிப்பை வழங்கினார்கள். பாண்டியா, ஹாசில் வுட் மற்றும் தயால் முக்கிய பங்கு வகித்தனர். புவனேஸ்வர் குமார் நல்ல பார்மை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:அபிஷேக் ஷர்மாவ பாத்து நான் ஏன் ஆச்சரியப்படனும்?.. இதுக்கு அவர் மட்டும்தான் இப்ப – கெவின் பீட்டர்சன் பேச்சு
பேட்ஸ்மேன்களுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறதோ அதே அளவு பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நிர்வாகம் புரிந்து கொண்டது. யார் உரிமையாளர்களாக வந்தாலும் ஆர்சிபி விராட் கோலி பேட்டிங் செய்ய ஒரு புது டெம்ப்ளேட்டை அமைத்துள்ளது. டிம் டேவிட் ஒரு பினிஷர் ஆக செயல்படுகிறார். சால்ட் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். சுயாஸ் ஷர்மா மற்றும் பாண்டியா பெரிய பெயர்கள் கிடையாது. ஆனால் க்ருனால் பாண்டியா பேட்டிங்கில் பெரிய பங்களிப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்” என்று அவர் பேசியிருக்கிறார்.






