ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் தலைமையில் நடப்பு டி20 உலக சாம்பியன் என்கின்ற பெயரோடு இந்திய அணி ஜிம்பாவேக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் அறிமுகமாகும் இந்திய இளம் வீரர் ஒருவருக்கு முகமது கைப் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்.
ஜிம்பாப்வே டி 20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், ஹர்ஷித் ராணா போன்ற அறிமுக வீரர்கள் கவனம் ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். அடுத்த ஐந்தாறு வருடங்களுக்கு இந்திய டி20 கிரிக்கெட்டுக்கு இந்தத் தொடர் ஆரம்பத் தொடராக அமைகிறது.
விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூன்று நட்சத்திர வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். எனவே இங்கிருந்து ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணி அமைக்கப்படுகிறது. மேலும் இந்த மூன்று வீரர்களுக்கும் மாற்று வீரர்களைக் கண்டறிய வேண்டும். தேவைப்படும் நேரங்களில் இது இல்லாமல் ஒன்று இரண்டு மாற்றங்களும் செய்யப்பட வேண்டும். எனவே ஐந்து வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்கள் என பத்து வீரர்களுக்கான தேவை உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் முகமது கைஃப் ஜிம்பாப்வே தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பஞ்சாப் மாநிலத்திற்காகவும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடும் இளம் இடது கை துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
முகமது கைப் தன்னுடைய வாழ்வில் கூறும் பொழுது ” அபிஷேக் ஷர்மாவை சீக்கிரத்தில் இந்திய ஜெர்சியில் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சில ஆண்டுகளாக யுவராஜ் சிங் உடன் இணைந்து மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆல் தி பெஸ்ட் அபிஷேக் ஷர்மா” என்று வாழ்த்தியிருக்கிறார். மேலும் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க : பும்ரா கிடையாது.. இதுவரை வந்த பாஸ்ட் பவுலர்களில் இப்ப ஆடும் இவர்தான் சிறந்தவர் – பிரையன் லாரா தேர்வு
அபிஷேக் ஷர்மா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு 16 போட்டிகளில, 32 ஆவரேஜில், மூன்று அரை சதங்களுடன் 484 ரன்கள் எடுத்தார். இதில் ஆச்சரியப்படும் விஷயமாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 204 என்று இருந்தது. அவர் 104 டி20 போட்டிகளில், 30 ஆவரேஜில், 2671 ரன்களை , 3 சதங்கள் மற்றும் 16 அரை சதங்களுடன், 153 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார்.






