பும்ரா கிடையாது.. இதுவரை வந்த பாஸ்ட் பவுலர்களில் இப்ப ஆடும் இவர்தான் சிறந்தவர் – பிரையன் லாரா தேர்வு

0
6318
Lara

தற்போது உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மட்டுமே இருக்கிறார். மற்றவர்களை எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒரு வடிவ கிரிக்கெட்டில் மட்டுமே சிறப்பான புள்ளி விபரங்களையும் செயல்பாட்டையும் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் லெஜெண்ட் பிரையன் லாரா இதுவரை வந்திருக்கும் வேகப் பந்துவீச்சாளர்களில் வேறொருவரை சிறந்தவராக தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் பும்ரா 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் அவர் ஒரு ஓவருக்கு 4 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இத்தோடு பும்ராவை பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட நினைக்காத பொழுதே அவர் இந்த 15 விக்கெட்களையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனவே பல முன்னாள் வீரர்களும் பும்ராவை உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக தேர்வு செய்து இருக்கிறார்கள். எந்த கிரிக்கெட் வடிவத்தில் என்றாலும் அவருடைய செயல்பாடும் முன்னணியில் இருக்கிறது. மேலும் ஆடுகளம் எப்படியானதாக இருந்தாலும் அது அவருடைய பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை.

இந்த நிலையில் லெஜெண்ட் பிரையன் லாரா இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை இதுவரையிலான வேகப்பந்துவீச்சாளர்களில் சிறந்தவர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது 41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துவங்கும் டெஸ்ட் போட்டி உடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து பிரையன் லாரா கூறும்பொழுது “இதுவரையில் விளையாடியதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிகச் சிறந்த வெகு பந்துவீச்சாளர். அவர் விளையாடிய போட்டிகள் மற்றும் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை ஆச்சரியமானவை. அவர் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு சிறப்பான சேவை செய்திருக்கிறார். ஓய்வு பெறுவது பற்றி அவரது மனதில் இருந்திருக்காது. ஆனால் அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவின் முடிவை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இங்கிலாந்து அணிக்காக ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்வை கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025 ஏலம்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.?.. ஒவ்வொரு டீமும் புதுபுது கோரிக்கை.. குழப்பத்தில் பிசிசிஐ

அவர் ஒரு வேகப்பந்துவீச்சாளராக 23 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அவர் விளையாடிய ஆண்டுகளின் அடிப்படையில் பார்த்தால் கோர்ட்னி வால்ஷ் மட்டுமே அவரது அருகில் இருப்பார் என்று நினைக்கிறேன். அவரது பாரம்பரியம் மிகப்பெரியது. ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரராக உலகம் முழுவதும் அவருக்கு மதிப்பு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -