அடுத்த வருசம் நோ தோனி..இந்த சம்பவத்தை பார்த்துமா உங்களுக்கு புரியல.. முகமது கையிப் அதிர்ச்சி தகவல்

0
851

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான மகேந்திர சிங் தோனி யாருமே எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்துவிட்டு வெளியேறினார். எனினும் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடி வருகிறார்.

கொரோனா காரணமாக சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக போட்டி நடைபெறவில்லை. அதனால் சென்னை ரசிகர்கள் முன் கடைசியாக ஒரு முறை சிஎஸ்கே அணிக்காக விளையாடிவிட்டு தான் ஓய்வு பெறுவேன் என தோனி ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

தற்போது தோனிக்கு 41 வயது ஆகிவிட்டது. இதனால் அடுத்த சீசனில் விளையாடுவது மிகவும் கடினம் தான். ஏனென்றால் தற்போது தோனிக்கு மூட்டு வலி பிரச்சனை ஏற்பட்டு விட்டது. இதனால், அவர் கடைசி கட்டத்தில் தான் பேட்டிங்கிற்கு வருகிறார்.

இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹம்மது கையிப், ஐ பி எல் கிரிக்கெட்டில் இதுதான் தோனிக்கு கடைசி ஆண்டு என்று கூறினார். இது தொடர்பாக பேசிய அவர் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று தான் நினைக்கிறேன்.

இதுதான் கடைசி சீசன் என்று தோனி பல சான்றுகளை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டார். தோனி எப்போதுமே தன்னுடைய எந்த முடிவை எடுப்பதற்கு முன்பு ரசிகர்களை யூகிக்க வைப்பார். அதுதான் தோனியின் குணமாக இருந்து வருகிறது. ஆனால் என்னை பொறுத்தவரை அடுத்த ஆண்டு தோனி விளையாட மாட்டார் என்று தான் என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது.

- Advertisement -

கவாஸ்கர் போன்ற ஜாம்பவான் எந்த கிரிக்கெட் வீரிடமும் இருந்து ஆட்டோகிராப் கேட்டு நான் பார்த்ததில்லை. ஆனால் அவரே தோனியிடம் சட்டையில் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார் என்றால் தோனியின் மகத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று முகமது கையிப் கூறினார்.

சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது 7வது லீக் ஆட்டத்தை விளையாடிவிட்டது. இதனால் ரசிகர்களுக்கு பிரியா விடை அளிக்கும் வகையில் சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி நன்றி தெரிவித்துக் கொண்டனர். தோனியும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தார். இதனை வைத்து பார்க்கும் போது தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.