இந்திய அணி நேற்று ஆறாவது முறையாக அண்டர் 19 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோதிய இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கும் இந்திய அணியின் தோல்விக்கும் இடையில் திட்ட ரீதியாக மூன்று விஷயங்கள் மட்டுமே முக்கியமானதாக அமைந்தது.
நேற்று போட்டி நடைபெற்ற மைதானத்தில் முதலில் பந்து வீசிய அணிகளை அதிக முறை வென்று இருக்கின்றன. ஆனாலும் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதிப் போட்டியின் ரன் அழுத்தத்தை எதிரணியின் மீது கொடுப்பதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்துக் கொண்டார்கள்.
அடுத்ததாக நேற்று ஆஸ்திரேலியா நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கியது. இதுதான் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஆன வெற்றியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.
வேகப்பந்து வீச்சு :
பல போட்டிகளில் வாய்ப்பு தராத ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் சார்லி ஆண்டர்சனை நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அதிரடியாக களம் இறக்கியது.
அதே சமயத்தில் இந்தியா இரண்டு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்திருந்தது. மூன்றாவதாக அர்சன் குல்கர்னி மட்டுமே நான்கு ஓவர்கள் வீசக்கூடியவராக இருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் அவருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படவில்லை. இந்தியா வேகப்பந்துவீச்சுக்கான கண்டிஷனை சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து சமாளிக்க நினைத்தது.
வேகப்பந்து வீச்சுக்கு எதிரான பேட்டிங் திட்டம் :
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு திட்டத்தை முறியடிப்பதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் கிரீசில் முன்னே வந்து விளையாடுவது போன்ற திட்டங்களை செய்யவில்லை. அவர்கள் பவுசன்ர்களை எதிர்பார்த்து கிரீஸில் இருந்தே விளையாடி சிக்கிக் கொண்டார்கள். கொஞ்சம் முன்னே நின்று விளையாடி இருந்தால் ஸ்விங்கையும் கட் செய்து இருக்க முடியும்.
கேப்டன்சி வியூகங்கள்:
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் நம்மிடம் இருந்த ஒரே சுழற் பந்துவீச்சாளருக்கும் ஸ்லிப் வைத்து தாக்குதல் நடத்தினார். ஆனால் இந்திய கேப்டன் ஆட்டத்தின் இரண்டாவது ஓவருக்கே இரண்டாவது ஸ்லிப் வைக்கவில்லை. டிக்சன் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து இதனால் தப்பித்தார்.
இதையும் படிங்க : “நாங்க தோற்றால் மகிழ்ச்சியா?.. கீ போர்டு வீரர்கள்” – பாக் ரசிகர்களுக்கு இர்ஃபான் பதான் பதிலடி
இப்படியான காரணங்களால் இந்திய அணி நேற்று தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை கண்டிஷனுக்கேற்ற திட்டங்களை கொண்டு வந்து, வழக்கம்போல் இறுதிப்போட்டியை அழகாக வென்று விட்டார்கள்.