“இங்க அடிச்சா அங்க வலிக்குது ” – விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பற்றி முகமது கைஃப் கருத்து!

0
612

கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 29ஆம் தேதி உடன் முடிவடைந்தது . மே மாதம் 28ஆம் தேதி நடைபெற இருந்த இறுதிப் போட்டி மலையின் காரணமாக 29ஆம் தேதி நடைபெற்றது

இந்த பரபரப்பான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது . இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்த சுப்மன் கில் 890 ரண்களை குவித்திருந்தார் . அவருக்கு அடுத்தபடியாக ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்லசிஸ் 730 ரண்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டேவான் கான்வே 672 ரண்களையும் ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலி 639 ரன்களையும் குவித்து முதல் நான்கு இடங்களை பெற்றனர் .

- Advertisement -

கடந்த இரண்டு சீசன்களிலும் சுமாராக விளையாடி வந்த இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இந்த சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . 6 அரை சதங்கள் மற்றும் 2 சதங்களுடன் 14 போட்டிகளில் 639 ரன்கள் குவித்திருக்கிறார் விராட் கோலி . கடைசியாக நடைபெற்ற இரண்டு லீக்க ஆட்டங்களிலும் தொடர்ந்து இரண்டு சதம் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த வருட ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் பேட்டிங்கை பலரும் பாராட்டி வந்தனர் .

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் ஆர்சிபி அணியின் வீரருமான முகமது கைஃப் விராட் கோலி சரியான நேரத்தில் தன்னுடைய ப்ரைம் ஃபார்ம்க்கு வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் . இது குறித்து பேசி இருக்கும் அவர் கடந்த இரண்டு சீசன்களிலும் சரியாக விளையாடாத விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் .

இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய அவர் இடையில் சிறிய சருக்கல்களை சந்தித்தாலும் தொடரின் முடிவில் இரண்டு சதங்களுடன் முடித்திருப்பது அடுத்து நடைபெற இருக்கும் வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவர் தயாராக இருப்பதை காட்டுவதாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

மேலும் இது பற்றி பேசிய கைப் ” விராட் கோலியின் இந்த ஆட்டம் தொலைதூரத்தில் இருந்து இந்த போட்டிகளை கண்டு கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் மனதில் நிச்சயமாக பயத்தை விதைத்திருக்கும். ஏனென்றால் அடுத்து அவர்கள் தான் வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விராட் கோலியை எதிர்கொள்ளப் போகிறார்கள் . அவர்களுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சதம் எடுத்திருந்தார் . தற்போது அவர் இருக்கும் ஃபார்முக்கு அவரிடமிருந்து நிச்சயமாக ஒரு பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கலாம் எனக் கூறினார் .