இங்கில பும்ரா செஞ்சது தப்பு.. சிராஜ் நல்லி பாயா சாப்பிடுற ஆளா இருக்க கலக்கிட்டார் – அசாருதீன் பேச்சு

0
61
Siraj

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியதற்கு இந்திய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஒரு வீரர் தான் விளையாடும் போட்டிகளை தேர்ந்தெடுக்க முடியாது எனவும், நாட்டுக்காக விளையாடும்போது இதற்கெல்லாம் இடம் கிடையாது எனவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நாட்டுக்காக விளையாடுகிறீர்கள்

இதுகுறித்து முகமது அசாருதீன் பேசும்பொழுது “காயம் இருக்கும் என்றால் அது குறித்து அணி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட வீரரும்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் அணியில் சேர்ந்த உடனேயே நீங்கள் விளையாடும் போட்டியை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. பணிச்சுமை இருப்பது உண்மைதான் அதை இந்த நிலையில் நிர்வகிக்க வேண்டும். ஆனால் நீங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள் என்று மறக்கக்கூடாது”

“பும்ரா தவிர மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைக்கு தகுந்தபடி உள்ளே வந்து தங்களது பங்களிப்பை கொடுத்தார்கள் என்பது வேறு கதை. பும்ரா இல்லாமல் நாங்கள் வெற்றி பெற முடிந்தது எங்களுடைய அதிர்ஷ்டம். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் தேவையாக இருந்து கிடைக்காமல் போனால் என்ன செய்வது?”

- Advertisement -

நல்லி பிரியாணி பாயா

“சிராஜ் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவருக்கு நல்லி கோஷ்ட் பிரியாணியும், பாயாவும் மிகவும் பிடித்த உணவுகள். இந்த உணவுகளை உட்கொண்டு அவர் உடல் வலிமையை மிகவும் சிறப்பாக வளர்த்துக் கொண்டார். அவரது கால்கள் மிகவும் வலிமையாக மாறியது. இந்த தொடர் முழுக்க அவர் சிறந்த ஆற்றலை கொடுத்தார். மேலும் இந்தியாவுக்காக சிறந்ததை கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அவரிடம் இருந்தது”

இதையும் படிங்க : நான் சிஎஸ்கேவை விட்டு போக விரும்பறேனா?.. சிஎஸ்கேகிட்ட ஒரு கேள்வி கேட்டேன் பதில் வரல – அஸ்வின் ஓபன் பேச்சு

“கடைசி டெஸ்ட் போட்டியில் ஓவலில் அந்த அற்புதம் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. பும்ரா இல்லாத நிலையில் வியத்தக்க முறையில் பொறுப்பை சிராஜ் ஏற்றுக் கொண்டார். அவர் இங்கிலாந்து வீரர்களை கடுமையாக எதிர்த்து சிறப்பாக பந்து வீசினார். இந்திய விளையாட்டின் புதிய சூப்பர் ஸ்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -