ரோகித் சர்மாவின் வீக்னஸ் இதுதான்.. கண்டிப்பா அவர நான் தூக்குவேன் – முகமது அமீர் சவால்

0
2271
Amir

நடப்பு 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை மறுநாள் நியூயார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் ரோகித் சர்மாவின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி நேற்று அமெரிக்க அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கலில் இருக்கிறது. எனவே அவர்களுக்கு ஏறக்குறைய இந்தியாவுக்கு எதிரான போட்டி நாக் அவுட் போட்டி போல மாறிவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி நாளை மறுநாள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது சுலபமாக இருக்கும். இதன் காரணமாக அவர்கள் இந்திய அணிக்கு எதிராக கடுமையாகப் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசி இருக்கும் முகமது அமீர் கூறும் பொழுது “ரோஹித் சர்மா உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அவருக்கான நாளில் அவர் யாரையும் விட மாட்டார். ஒரு பந்துவீச்சாளராக உங்களுக்கு அவரது விக்கெட்டை ஆரம்பத்தில் வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவர் 15 முதல் 20 பந்துகள் விளையாடிய பிறகு, அவரை வீழ்த்துவது மிகவும் கடினமான ஒன்று. எனவே நான் புதிய பந்தை பயன்படுத்தி அவரை வீழ்த்துவேன்.

2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த சதம் அவரது சிறந்த இன்னிங்ஸ் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அந்த போட்டியில் ஆரம்பத்தில் பந்து சரியாக பேட்டரிக்கு வரவில்லை. கேஎல் ராகுல் கூட தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அவ்வளவு ரன் அடிச்ச.. யாருமே கண்டுக்கல.. டீம்ல இருந்து கூப்பிட்டு பேசவே இல்ல – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

பிறகு அந்த போட்டியில் பகார் ஜமான் மற்றும் பாபர் அசாம் இருவர் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. அப்போது குல்தீப் யாதவ் வந்து விக்கெட் எடுத்ததுதான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ய நாங்கள் ரன் ரேட்டில் பின்தங்கி விட்டோம்” என்று கூறியிருக்கிறார்.