உலககோப்பையை ஜெயிக்கிறது மேட்டரே இல்ல.. இந்திய அணியை ஜெயிக்கணும் – முகமது ரிஸ்வான் பேச்சு

0
172
Rizwan

நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ள இருக்கும் போட்டிக்கு தற்போது இருந்தே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இரு நாடுகளிலும் மிக அதிகமாக இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குறித்து முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஷ் ராஜா கூறியதை முகமது ரிஸ்வான் நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் இந்த டி20 உலக கோப்பை தொடரில் நியூயார்க் புதிய மைதானத்தில் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விளையாட இருக்கிறது. இதற்கு ஏற்கனவே அனைத்து டிக்கெட்டுகளும் மிக அதிக விலையில் விற்றுத் தீர்ந்துவிட்டன. வழக்கம்போல இந்த உலக கோப்பையிலும் இந்த போட்டிக்கு மிக அதிக சந்தை மதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

கடைசி முறை டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி தனி ஒரு வீரராக பாகிஸ்தான் அணியிடமிருந்து போட்டியை வென்று கொடுத்தார். அதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை இந்திய அணியை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முகமது ரிஸ்வான் பேசும்பொழுது ” 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு நாங்கள் உலகக் கோப்பையில் இந்திய அணியை வென்றதில்லை. அப்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஷ் ராஜா உலகக் கோப்பையை விட இந்தியாவை வெல்வது முக்கியம் என கூறினார். அப்போது உலகக் கோப்பைக்கு நீண்ட நேரம் இருந்தது. ஆனால் அவர் அப்படியான எண்ணத்தை அணிக்குள் வளர்த்தார். நீங்கள் உலகக் கோப்பையை இல்லாவிட்டாலும் இந்திய அணியிடம் தோல்வி அடையாதீர்கள் என்று கூறினார். நீங்கள் அழுத்தத்திற்குள் வரக்கூடாது அவர்களைக் கொண்டு வாருங்கள் என்றார்.

எனக்கு உலகக்கோப்பை போட்டியாக இருந்தாலும் சரி பொதுவாக பெரிய போட்டியாக இருந்தாலும் சரி அதுவே முதல் முறை. எனவே மற்ற போட்டிகளில் இருந்து எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை, சாதாரண போட்டியாகவே நினைத்தேன்.ஆனால் நாங்கள் வென்ற பிறகு தான் எப்படியான ஒன்றை சாதித்திருக்கிறோம் என்று கூறினது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் பாணியில்.. வித்தியாசமாக ஓய்வை அறிவித்த கேதார் ஜாதவ்.. ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் ஓய்வு

நாங்கள் இந்திய அணியை வென்ற பிறகு நான் கடைக்கு சென்றால் என்னிடம் அதற்கு காசு வாங்க மாட்டார்கள். இதன் காரணமாகவே நான் கடைக்கு செல்வதை நிறுத்தி விட்டேன். பிறகு ஒருவருடைய வீட்டிற்கு நான் சென்றேன் அப்போது நாங்கள் இந்தியாவை வென்ற போட்டி டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் அந்த போட்டியை தினமும் மீண்டும் மீண்டும் பார்ப்பார்களாம். அந்த அளவிற்கு இந்திய அணியை வெல்வது முக்கியமானதாக பாகிஸ்தான் மக்களுக்கு இருந்தது” என்று கூறி இருக்கிறார்.