தோனியின் பாணியில்.. வித்தியாசமாக ஓய்வை அறிவித்த கேதார் ஜாதவ்.. ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் ஓய்வு

0
18
Kedar

இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி, எல்லோராலும் அறியப்பட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த 39 வயது கேதார் ஜாதவ் ஓய்வு முடிவை தோனியின் வழியில் அறிவித்திருக்கிறார்.

கேதார் ஜாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடியவர். இவருக்கு முதல்முறையாக இந்திய அணிகள் விளையாடும் வாய்ப்பு இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிடைத்தது. அடுத்து 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அறிமுகமானார். இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2020ஆம் ஆண்டு விளையாடினார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கேதார் ஜாதவ் 2010ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கப்பட்டார். இதற்கு அடுத்த ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடினான். மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்குத் திரும்பி 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.

அடுத்து இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை விளையாடினார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், 2023 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் விளையாடினார்.

- Advertisement -

இந்த நிலையில் தோனி ஓய்வு முடிவை அறிவித்த போது அதில் ஓய்வு முடிவை எடுத்த நேரத்தையும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தது போல, கேதார் ஜாதவும் அப்படியே ஓய்வு முடிவை வெளியிட்டு இருக்கிறார். கேதர் ஜாதவ் ஓய்வு முடிவில் “என் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதுமாக நீங்கள் தந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று மாலை 3 மணி முதல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் மாதிரி வீக்கான டீம் இந்தியாவுக்கு போட்டியா?.. ஒரே ஒரு பயம்தான் இருக்கு – முகமது கைப் பேட்டி

கேதார் ஜாதவ் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 73 போட்டிகளில் 6 அரை சதங்கள் மற்றும் 2 சதங்களுடன் 1349 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 1 அரை சதத்துடன் 122 ரன்களும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -