இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்குள் கருத்து வேறுபாடா.? இந்தியா பாக் போட்டியில் நடந்த நிகழ்வு.. ஆவேசப்பட்ட ஹர்திக்.. முகமது கைப் விளக்கம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆனால் அந்த போட்டியின் இறுதியில் ஹர்திக் பாண்டியா சூர்யா மற்றும் குல்தீப் யாதவ் மூவருக்கும் இடையே நடந்த சிறிய மோதல் குறித்து முகமது கைப் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஷாகின் அப்ரிடி அடித்த கேட்சை குல்தீப் யாதவ் தவறவிட்டார். அதனால் அடுத்த பந்தினை அப்ரிடி சிக்ஸருக்கு அனுப்பினார். இருப்பினும் அதே ஓவரின் கடைசி பந்தில் உஸ்மான் தாரிக்கை அவுட் ஆக்கி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த வீரர்கள் கைகுலுக்கி கொண்டிருந்தபோது ஹர்திக் கோபமாக குல்தீப்பிடம் பேசியதை கேமராவில் கவனிக்க முடிந்தது. பின்னர் அவர் சூரியகுமார் யாதவிடமிருந்து விலகிச் சென்றார். இதனால் மூவருக்கும் இடையே சிறிய மோதல் அல்லது கருத்து வேறுபாடு என சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து முகமது கைப் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் அனைவருமே நண்பர்கள். குல்தீப் மாதிரியான குணம் கொண்டவர், அவர் பந்து நல்லா வீசலைனா அவர் மேலயே கோபப்படுவார். சில நேரங்களில் கேட்சுகள் தவறவிடப்படலாம். சகவீரர்கள் அவரை கிண்டல் பண்ணலாம் இதில் தனிப்பட்ட எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் மைதானத்தில் உங்களுக்கு நெருக்கமான பிடித்த ஒருவரிடம் தான் இது போல் கோபப்பட முடியும்.

இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு அவரை முழுசா பிடிக்கலைன்னா இந்த மாதிரி கோபத்தை வெளி காட்ட முடியாது. சூர்யா மற்றும் ரோகித் என இருவரும் குல்தீப் மேல் கிண்டல் செய்வதை பார்க்க முடியும். அதே போல தான் ஹர்திக் பாண்டியாவும், அவர் நட்பு ரீதியாக சில விஷயங்களை சொல்லலாம். இதனால் அவர்களுக்கு இடையே தனிப்பட்ட வகையில் எந்த விதமான பிரச்சனையும் கருத்து வேறுபாடும் கிடையாது. இது முழுக்க முழுக்க நட்பின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by