நேத்து விராட் களத்துல செஞ்ச ஒரு விஷயம் உலகத்துல யாரும் செய்ய மாட்டாங்க.. மனுஷன் ஆடறதே இதுக்கு தான் – முகமது கைஃப் பேச்சு

0
12
Kaif

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த விராட் கோலி களத்தில் செய்த ஒரு செயல் உலகில் யாரும் செய்ய மாட்டார்கள் என முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் விராட் கோலி 60 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து போட்டியை முடித்து வைத்தார். மேலும் அவர் கடந்த இரண்டு போட்டிகளாக ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உலகில் யாரும் செய்ய மாட்டார்கள்

இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி தன்னுடைய முதல் ரன்னை எடுத்ததும் அதை கொண்டாடினார். அதே சமயத்தில் அவர் இரண்டு போட்டிகளில் ரன் எடுக்காதவர் போல களத்திற்கு வரவில்லை. மிகவும் மகிழ்வாகவும் சந்தோஷத்துடனும் விளையாடினார்.

இது குறித்து முகமது கைப் பேசும்போது “விராட் கோலி கடந்த காலத்தில் நடந்ததை பற்றி எதையும் நினைக்காமல் மகிழ்வாக விளையாடிக் கொண்டிருந்தார். ரகானே தனது வீரர்களுடன் திட்டத்தை களத்தில் தீட்டிக் கொண்டிருந்த பொழுது, விராட் கோலி நடுவர்களுக்கு நேராக போய் நின்று கொண்டு இருந்தார். அவர் தன் முதல் ரன் எடுத்ததை கொண்டாடினார். அவரிடம் எந்த விதமான அழுத்தமும் இல்லை. உண்மையில் உலகில் இதை யாரும் செய்ய மாட்டார்கள்”

- Advertisement -

இதுதான் முக்கியமான விஷயம்

“நேற்று அவர் களத்திற்கு வந்தபோது முதல் இரண்டு போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காதவர் போல தெரியவே இல்லை. மிகவும் அமைதியாகவும் மகிழ்வோம் தன்னுடைய பேட்டிங்கில் முழுமையான கவனத்தை செலுத்தி விளையாடினார். எது குறித்தும் அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை”

இதையும் படிங்க: என்னால் விராட் கோலி பற்றி பேச முடியாது.. அவர் இந்த மாதிரியான ஆளு.. எங்க ஒட்டுமொத்த பிளான் இதுதான் – ரஜத் படிதார் பேச்சு

“உலகில் எந்த வீரர்களும் இப்படி செய்ய முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களிடம் ரன் எடுக்க முடியாத பதட்டம் நிச்சயம் இருக்கும். அவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் அந்த அழுத்தத்தை எடுத்துக் கொண்டு தடுமாறுவார்கள். ஆனால் விராட் கோலி அப்படி இல்லை” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -