ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என முகமது கைஃப் கூறியிருக்கிறார். மேலும் இதற்கான காரணம் குறித்தும் அவர் விளக்கி இருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் ரோகித் சர்மாவின் கைகளை விட விராட் கோலியின் கைகளே உயர்ந்திருக்கிறது. அவர் கடைசி ஏழு போட்டிகளில் மூன்று சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை விராட் கோலி 2 டக் அவுட் உடன் ஆரம்பித்தார். ஆனால் ரோகித் சர்மா இரண்டு அரை சதங்கள் உடன் ஆரம்பித்தார். மேலும் மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தார். விராட் கோலி அந்த போட்டியில் ஆட்டம் இழக்காமல் அரை சதம் அடித்திருந்தார்.
இதற்குப் பிறகு ரோகித் சர்மா இரண்டு அரை சதங்கள் அடித்து இருக்கும் நிலையில், விராட் கோலி 3 சதங்கள் அடித்து விட்டார். மேலும் வரிசையாக அரை சதங்களும் வந்து கொண்டிருக்கிறது. அவர் தொடர்ச்சியாக ரன்கள் அடித்துக் கொண்டே இருக்கிறார். மேலும் தனது அணுகுமுறையை மாற்றி அதிரடியாக விளையாடவும் ஆரம்பித்திருக்கிறார்.
இதுகுறித்து முகமது கைப் பேசும்பொழுது “விராட் கோலி தனக்கு கிடைக்கும் தொடக்கங்களை பெரிய ஸ்கோர் ஆக மாற்றுவார். அவருக்கு 30, 40 ரன்கள் கிடைத்தால் அதை எடுத்துக்கொண்டு வேகமாக மேலே செல்வார். மேலும் அவர் பார்முக்கு வந்து விட்டால் நிலையானவராக இருப்பார். இதனால்தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை விட விராட் கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார்”
இதையும் படிங்க : கில் கிடையாது.. அடுத்த விராட் கோலி இந்த பையன்தான்.. இதுதான் சாட்சி – இர்பான் பதான் கணிப்பு
“விராட் கோலி ரன்கள் எடுத்து அதை பெரிய இன்னிங்ஸ் ஆக மாற்றி விளையாடுகிறார். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த பொழுதும், தான் தவறான ஷாட் ஆடிவிட்டதாக தலையை ஆட்டிக் கொண்டே சென்றதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதுதான் விராட் கோலி” என்று கூறியிருக்கிறார்.