கில் கிடையாது.. அடுத்த விராட் கோலி இந்த பையன்தான்.. இதுதான் சாட்சி – இர்பான் பதான் கணிப்பு

0
42
Virat

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ரான் பதான் விராட் கோலி போல பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடி அணியை வெற்றி பெற வைக்க கூடிய இளம் வீரர் யார் என்று கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசியில் இருக்கிறார். அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் அவர் விடைபெற்று விடுவார். எனவே அவரைப் போல பொறுப்பெடுத்து விளையாடி அணியை வெற்றி பெற வைக்க கூடிய பேட்ஸ்மேனை கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலியின் மகத்துவம்

விராட் கோலி கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்பாக ஒரு போட்டியில் கூட சரியான ரன் எடுக்கவில்லை. ஆனாலுமே அவர் கடைசியில் எப்படியும் ரன்கள் எடுப்பார் என்கின்ற நம்பிக்கை ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்திடம் இருந்தது.

இதைப் போலவே இறுதிப்போட்டியில் விக்கெட் சரிவு ஏற்பட்ட நேரத்தில் ஒரு முனையில் தனி ஒருவராக நின்று ரன் சேர்த்து இந்திய அணியை காப்பாற்றினார். இந்த மாதிரியான நேரங்களில் பொறுப்பு மற்றும் புத்திசாலித்தனத்துடன் விளையாடக்கூடிய தற்போதைய இளம் இந்திய வீரர் யார் என்பது குறித்து இர்பான் பதான் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இவர்தான் விராட் கோலி

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது ” நிச்சயமாக விராட் கோலியை போலவே திலக் வர்மா பொறுப்புடன் விளையாடுகிறார். அவர் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் வந்து சிறப்பான முறையில் விளையாடும் போட்டியை வென்று கொடுக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தம் மிகுந்த ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் அவர் அதை செய்து காட்டினார். அவருக்கு அந்த திறமை நிச்சயம் இருக்கிறது”

இதையும் படிங்க : கம்பீருடன் விராட் ரோஹித் பேசுவதில்லையா.. டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது? – இந்திய பேட்டிங் கோச் பதில்

“டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி மற்றவர்களை விளையாட விட்டு பொறுமையாக இருந்து கடைசியில் ரன் எடுத்துக் கொடுத்தார். இதேபோல திலக் வர்மா புத்திசாலித்தனமாக இருந்து ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் சாம்சன் மற்றும் சிவம் துபேவை ரன்கள் எடுக்க விட்டு பொறுமையாக இருந்தார். பிறகு திட்டமிட்டு கடைசியில் ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். அவரால் விராட் கோலியின் ரோலை எடுத்துக் கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -