இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வருமாறு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அழைக்க வேண்டும் என முகமது கைப் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இருந்து தற்போது தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடர் வரை ரோகித் சர்மா இரண்டு அரை சதம் மற்றும் ஒரு சதம், விராட் கோலி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து சிறந்த பார்மில் இருக்கிறார்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களை பரிசோதிக்க நினைக்க கூடாது என முகமது கைப் கூறியிருக்கிறார்.
ஆலோசனைக் கூட்டம் எதற்கு?
தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவர் கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் கம்பீர் மற்றும் அகர்கர் தலைமையில் நடைபெறும் என்று செய்திகள் கூறப்பட்டது. இந்த நிலையில் சிறப்பாக விளையாடி வரும் இருவர் குறித்தும் எதற்காக ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்? என ரசிகர்கள் கொதித்து வருகிறார்கள்.
இதுகுறித்து முகமது கைப் பேசும் பொழுது ” இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் கொஞ்சம் புத்திசாலித்தனமாக மாறி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த நிலையில் நீங்கள் அவர்களுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எதற்காக விவாதிக்க நினைக்கிறீர்கள்? அப்படி விவாதிக்க என்ன இருக்கிறது? அவர்கள் இருவரும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள்”
திரும்ப கூப்பிடுங்கள்
“நீங்கள் இப்போது மிகவும் மோசமாக தோல்வி அடைந்து வருகிறீர்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் இருந்தால் அது உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அவர்கள் முடிவை அவர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றாலும் கூட நீங்கள் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்க வேண்டும்”
இதையும் படிங்க : விராட் கிட்ட போட்டிக்கு முன்னாலே பேசினேன்.. அவர் தெளிவா இந்த ஒரு விஷயத்தை சொல்லிட்டார் – டேல் ஸ்டெய்ன் தகவல்
“தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விராட் மற்றும் ரோகித் இல்லையென்றால் இந்திய அணியால் ஏதும் செய்ய முடியாது என்று தெளிவாக தெரிகிறது. நேற்றும் கூட உங்களுடைய இளம் வீரர்கள் ரன் எடுக்கவில்லை. மூத்த வீரர்கள் ரன் எடுத்ததால்தான் இந்தியா வென்றது. இல்லையென்றால் தென் ஆப்பிரிக்கா வென்று இருக்கும். எனது மூத்த வீரர்கள் மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.






