தற்போது தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாததால் வாஷிங்டன் சுந்தரின் தன்னம்பிக்கையில் எந்த குறைவும் ஏற்படாது என இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் கூறியிருக்கிறார்.
நாளை இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்று இருப்பதால் கடைசி போட்டியை வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் சுந்தரை நீக்க வேண்டும்
தற்போது இந்திய பேட்டிங் யூனிட்டில் பிரதான பேட்ஸ்மேன் இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் அடிப்படையில் விரல் சுழல் பந்துவீச்சாளரான அவருக்கு நான்கு ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. கடந்த சில டெஸ்ட் போட்டிகளாகவும் அவருக்கு பந்து வீச்சில் பெரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.
வாஷிங்டன் சுந்தருக்கு முதலில் பந்து வீசுவதற்கு வாய்ப்புகள் கொடுத்து அவரை ஒரு பந்து வீச்சாளராக உணர வைக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். அவர் யார் என அவரே தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டால் தன்னம்பிக்கை குறைந்துவிடும் எனவும் எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்திய பயிற்சியாளர் பதில்
இதுகுறித்து இந்திய துணைப் பயிற்சியாளர் ரியான் டென் பிஸ்கட் கூறும்பொழுது “விரல் ஸ்பின்னரை பயன்படுத்தும் பொழுது நீங்கள் அதற்கான மேட்ச்சப்பை பார்க்கிறீர்கள். அடிப்படையில் வாசிங்டன் சுந்தர் உங்களுடைய 6 பவுலர்களில் ஒருவர். விரல் ஸ்பின்னர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இருக்கிறார்கள். இவர்களுடன் பிரதான ஸ்பின்னர் குல்தீப் யாதவ் இருக்கிறார். மூன்று ஸ்பின்னர் இருந்தாலும் எங்களுக்கு 20 ஓவர்கள் மட்டுமே தேவைப்படுகிறது”
இதையும் படிங்க : பெரிய திறமை இல்லாதவர்கள்.. விராட் ரோகித் எதிர்காலத்தை முடிவு பண்றாங்க – ஹர்பஜன் சிங் எதிர்ப்பு
“இதனால் வாஷிங்டன் சுந்தர் தன்னம்பிக்கை குறைந்து விடும் என்று கிடையாது. அவர் தற்போது வேகமாக கற்றுக் கொண்டிருக்கும் ஒரு வீரர். குறிப்பாக பேட்டிங்கில் கற்றுக் கொண்டு வருகிறார். அவர் கடந்த 12 மாதத்தில் நல்ல கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அவருக்கு இரண்டு போட்டிகள் சரியாக போகாதது பெரிய பிரச்சினையை உண்டாக்காது” என்று கூறியிருக்கிறார்.






