தற்போது இந்திய கேப்டன் சுப்மன் கில் காயம் அடைந்திருக்கும் நிலையில் மீண்டும் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இது குறித்து முகமது கைப் பேசி இருக்கிறார்.
தற்போது தென் ஆப்பிரிக்க கேப்டன் கில் காயம் அடைந்து இருக்கிறார். மேற்கொண்டு அவர் தென் ஆப்ரிக்க தொடரில் விளையாடுவாரா என்பது சந்தேகத்திற்கு இடமாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக கேப்டன் பொறுப்பை மற்றவருக்கு தருவதில் மேலும் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் ஏற்கனவே கடுமையான காயத்தில் தற்பொழுது தான் வெளியில் வந்திருக்கிறார். எனவே அவர் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவருமே காயமடைந்து வெளியில் இருக்கின்ற காரணத்தினால் புதிதாக யாரிடம் கேப்டன் பொறுப்பை கொடுப்பது என்கின்ற பேச்சு வார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது ரோகித் சர்மாவிடம் ஒரு தொடருக்கு மட்டும் கேப்டனாக இருக்குமாறு பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : தப்பு உங்க மேல இருக்கு.. அப்புறம் ஏன் இந்திய பேட்ஸ்மேன்களை குறை சொல்றீங்க.. கம்பீரை சாடிய இந்திய முன்னாள் வீரர்
இது குறித்து முகமது கைப் பேசும் பொழுது ” ரோகித் சர்மாவிடம் பிசிஐஐ திரும்பி செல்லாது என்று நினைக்கிறேன். அப்படியே திரும்பி சென்றாலும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது உறுதி. எனவே இதன் காரணமாக அவர்கள் கேஎல்.ராகுலிடம் செல்வார்கள் என்பது தான் உறுதியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.